அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்குமா? கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு!
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களின், உதவி கிடைக்கும் வகையில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த அரசாங்க திட்டத்தின் கீழ் அமைப்புசாரா துறை சேர்ந்த தொழிலாளர்கள் குறைந்தபட்சம் மாதம் ஓய்வு ஊதியம் ரூபாய் 5000 வழங்கப்படுவதாக உறுதி செய்யப்படுகிறது.
இந்த அமைப்பு சாரா தொழிலாளர் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள், ஓய்வூதியம், குழந்தைகளுக்கு கல்வி உதவி, விபத்து மற்றும் இழப்பிற்கு இழப்பீடு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாட்டு கட்டுமான அமைப்புசாரா மற்றும் 12 புதிய நிலவாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர். ஜீவானந்தம் தலைமையில் அணிவிக்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு வந்தனர்கள்.
பின்னர் அவர்களில் சிலர் கலெக்டர் கார்மேககதிடன் மனு கொடுத்தனர்.ஓமலூர் கமலாபுரம் அருகே சேலத்தான் காட்டுப் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்ற மாற்றுத்திறனாளி பெண் உறவினர்களுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஐந்து மாதங்களாக ஓய்வுரிய வழங்கவில்லை ஆனால் கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி ஒதுக்கி விட்டு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு நிதி ஒதுக்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
மேலும் இந்தக் கூட்டத்தில் தாரமங்கலம் நரிக்குறவர் காலனியில் வசித்து வரும் ஏழு பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார் அதுமட்டுமின்றி மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 294 மனுக்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.