TVK Vijay: நடிகர் விஜய் மற்றும் சிம்ரன் சேர்ந்து துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, உதயா உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இதில் பெரும்பாலான படங்கள் பெரும் ஹிட் அடித்தவை தான். தற்போது விஜய் அரசியலுக்குள் நுழைந்ததையடுத்து பல சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் லண்டன் சென்று விட்டு டெல்லி திரும்பிய சிம்ரனிடம் இது ரீதியாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்,
விஜய் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள் அவர் தாக்குப் பிடிப்பாரா என்று கேள்வி கேட்டுள்ளனர்?? இது ரீதியாக சிம்ரன் அளித்த கூறியதாவது, சிம்ரன் அரசியலுக்கு வந்ததற்கு ஆல் தி பெஸ்ட் மற்றும் குட் லக். மேற்கொண்டு அவர் தாக்குப் பிடிப்பாரா என்பதை சரியான நேரம் வரும்போது கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் தற்போது நடித்து வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் வெற்றியடைந்ததையடுத்து அதி ரீதியாகவும் பேசியுள்ளார்.
தற்போது டூரிஸ்ட் பேமிலி படம் வெற்றியடைந்துள்ளது இது எனக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. இதேபோல குட் பேட் அக்லி படமும் நல்ல வரவேற்பபை பெற்றுள்ளது. தற்போது சினிமா பார்க்கும் ஆடியன்ஸ் ஓப்பன் மைண்டாக உள்ளார்கள். இந்த காலகட்டத்தில் நல்ல கதை அம்சம் இருக்கும் பட்சத்தில் பெண்களே கதாநாயகிகள் அமைத்து படம் தயாரிக்கலாம். ஆனால் இதற்கு மிகவும் முக்கியமான ஒன்று நல்ல கதை அம்சம் தான்.
மேற்கொண்டு இந்தியா பாகிஸ்தான் போர் குறித்தும் கூறினார், இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றமான சூழலில் இருந்தாலும் மனிதநேயம் கட்டாயம் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.