அதிரடி முடிவை அறிவித்த தேமுதிக தலைமை! சோகத்தில் தொண்டர்கள்

Photo of author

By Sakthi

இந்த தேர்தலில் தமிழக மக்களை கடைசி நொடி வரை பரபரப்பிலேயே வைத்திருந்த ஒரு கட்சி என்றால் அது தேமுதிக தான் என்பது தமிழகம் முழுக்க எல்லோருக்கும் தெரியும்.
அந்த அளவிற்கு அந்தக் கட்சி எடுத்த நடவடிக்கையும், நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தையும் பரபரப்பாக அனைவராலும் உற்று நோக்கப்பட்டது. கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக சிறிது காலத்திற்குப் பிறகு அந்த கூட்டணியை விட்டு வெளியேறியது. இந்தநிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணி என்ற புதிய கூட்டணியை அமைத்து போட்டியிட்டது. ஆனால் அதில் படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. அந்த கூட்டணி 2021 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது.

இந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க அதிமுகவை மறைமுகமாக அதிக தொகுதிகளை கேட்டு மிரட்டும் தோணியில் இறங்கியது.இதையெல்லாம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த எடப்பாடி பழனிச்சாமி தேமுதிகவிற்கு தமிழகத்தில் இருக்கின்ற வாக்கு சதவீதம் எவ்வளவு என்ற கணக்கை இரகசியமாக எடுக்கத் தொடங்கினார்.ஒருவழியாக அந்த கட்சிக்கு தமிழகம் முழுவதிலும் 2 சதவீத வாக்குகள் தான் இருக்கிறது என்ற ரிப்போர்ட் எடப்பாடி பழனிச்சாமி கைக்கு வந்து சேர்ந்தது. இதனை பார்த்து புன்னகைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மிக நிதானமாக யோசிக்க தொடங்கினார்.

வெகு காலமாக கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சி அதே சமயத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வாக்கு வங்கி இல்லாத ஒரு கட்சிக்கு எவ்வாறு அவர்கள் கேட்கும் இடங்களை நாம் கொடுக்க முடியும். அப்படி கொடுத்தால் அது நமது வெற்றிக்கு பாதிப்பாக முடிந்து விடும் என்று யோசித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அனைத்தையும் கூட்டி கழித்துப் பார்த்த முதலமைச்சர் நேரம் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று அமைதியாக இருந்தார் தேர்தலும் நெருங்கி வந்தது.கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் தொகுதி பங்கீடு செய்ததில் அதிமுக சார்பாக தேமுதிகவிற்கு அதிகபட்சமாக 12 தொகுதிகள் ஒதுக்கலாம் என்ற முடிவுக்கு வந்தது அதிமுக.

ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத தேமுதிக தலைமை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த சமயத்திலேயே நாங்கள் நாற்பத்தி ஒரு தொகுதிகள் வாங்கினோம் ஆனால் தற்சமயம் எங்களுக்கு ஏன் இவ்வளவு குறைவான தொகுதியா என்று முரண்டு பிடித்தது தேமுதிக தலைமை இந்தக் கட்சியின் தலைமை எவ்வளவு முயற்சி செய்தும் அதிமுக தன்னுடைய நிலையை மாற்றிக் கொள்வதாக இல்லை ஆனால் கடைசியாக 17 தொகுதிகள் தருவதற்கு சம்மதித்தது.

இருந்தாலும் சமாதானம் அடையாத தேமுதிக தலைமை கூட்டணியில் இருந்து வெளியேறியது. கூட்டணியிலிருந்து வெளியே வந்த அந்த கட்சி, திமுக கமல்ஹாசன் அவர்களின் மக்கள் நீதி மையம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியது.

திமுகவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்தவிதமான உடன்பாடு அல்லது கையொப்பமும் ஏற்படவில்லை. காரணம் அந்த கட்சி முன்னரே தேமுதிக மீது கடும் கோபத்தில் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.அதன் பின்பு கடைசியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிலும் நீண்ட பேச்சுவார்த்தைக்கும், இழுபறிக்கு பின்னர் அந்த கூட்டணியில் தேமுதிகவை இணைத்துக்கொள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சம்மதித்தது.

இந்தக் கூட்டணியில் தேமுதிகவிற்கு சுமார் 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. அதுவும்கூட டிடிவி தினகரனின் அரசியல் லாபத்திற்காக தான் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தேமுதிக சார்பாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் எல் கே சுதீஷ் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. அதேபோல விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விருத்தாச்சலம் தொகுதியில் அந்த கட்சியின் சார்பாக திமுகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். ஆகவே இந்த தேர்தலில் விஜயகாந்த் களமிறங்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

காரணம் என்னவென்று கேட்டால் அவருடைய உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அதேபோல எதிர்வரும் தேர்தலில் பிரச்சாரத்திலும் கூட விஜயகாந்த் ஈடுபட மாட்டார் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் அவருடைய ரசிகர்களும், தொண்டர்களும் மற்றும் அவருடைய அபிமானிகளும், மிகுந்த சோகத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.