விஷாலுக்கும் அபிநயாவிற்கு கூடிய விரைவில் திருமணமா? உண்மையை உடைத்த அபிநயா!

Photo of author

By Parthipan K

விஷாலுக்கும் அபிநயாவிற்கு கூடிய விரைவில் திருமணமா? உண்மையை உடைத்த அபிநயா!

விஷால் மற்றும் அபிநயா இருவரும் காதலித்து வருவதாகவும் கூடிய விரைவில் அவர்களின் திருமணம் நடைபெற உள்ளது போன்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அபிநயா இதற்கான பதில் அளித்துள்ளார்.

நாடோடிகள், பூஜை, குற்றம் 23, ஈசன் போன்ற படங்களில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்தவர் அபிநயா. அவர் தற்போது நடிகர் விஷாலுடன் “மார்க் ஆண்டனி” படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் இருவருக்கும் இடையிலான காதல் மலர்ந்துள்ளதாகவும் கூடியவிரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த புரளிகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அபிநயா அவர்கள் பதில் அளித்துள்ளார். மார்க் ஆண்டனி படத்தில் இருவருமே கணவன் மனைவியாக நடித்துள்ளதாகவும் அந்த படத்தின் புகைப்படங்கள் வெளியானது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த புகைப்படங்களால் நாங்கள் காதலிப்பதாகவும் மற்றும் இருவருக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டதாகவும் வரும் செய்திகள் அனைத்தும் பொய் என்றும் இதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அபிநயா அவர்கள் கூறியுள்ளார்.

இவ்வாறு விஷாலுக்கும் அபிநயாவுக்கும் இடையிலான புரளிகள் குறித்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அபிநயா.