டாக்டர் வில்சன் விவகாரத்தில் கிறிஸ்துவ மத சிக்கல் உள்ளது : சர்ச்சையை கிளப்பும் அரசியல் விமர்சகர்!

Photo of author

By Parthipan K

கடந்த சில நாட்களுக்கு முன்பு நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் வில்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டாக்டர் வில்சன் கிறிஸ்துவர் என்பதால் அவரை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையில் புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

டாக்டர் வில்சனின் உடல் அவரது மனைவி மகன் மற்றும் ஒரு மருத்துவருடன் ஆம்புலன்சில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள சத்திரம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கூடியிருந்த அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸில் வந்த அவரது உடலை அடக்கம் செய்ய மறுத்து, உடன் வந்த ஓட்டுநர் மற்றும் உறவினர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதனால் அவரது உடல் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு தமிழக அரசின் பரிந்துரையின் பெயரில் வேலங்காட்டில் உள்ள இந்துக்களின் மயானத்தில் உடனடியாக அடக்கம் செய்யப்பட்டது. ஒரு மருத்துவரின் உடலை புதைக்க மறுத்தது மற்றும் உறவினர்களை தாக்கியது மனிதாபிமானம் அற்ற செயல் என்று கடும் கண்டனங்கள் பதிவானது.

இந்த விவகாரத்தில் மருத்துவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்யும் விதமாக சில நடவடிக்கைகளை எடுத்திருந்தனர். இதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தலையிட்டு மருத்துவர்களை சமாதான படுத்தியதோடு மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை என்ற கடுமையான சட்டத்தையும் கொண்டு வந்தது‌.

இதற்கிடையில் மருத்துவர் வில்சனின் மனைவி ஆனந்தி தமிழக முதல்வருக்கு கண்ணீர் மல்க கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். அதில் தன்னுடைய கணவரின் உடலை அவசர அவசரமாக இந்துக்களின் சுடுகாட்டில் புதைக்கப்பட்டதால், அதன் தோண்டி எடுத்து தங்களது கிரிஸ்துவ முறைப்படி புதைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார்.

இந்த நிலையில் அரசியல் விமர்சகர் கிஷோர் கே ஸ்வாமி தனது முகநூல் பக்கத்தில் மருத்துவர் வில்சன் விவகாரத்தில் பிரச்சினை வருவதற்கு காரணம் மத சிக்கல் தான் என்று கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது;

‘டாக்டரை அடக்கம் செய்ய எதிர்ப்பு.
இதன் பின்னணி இதுதான்..
இறந்த டாக்டர் கிறிஸ்தவர்.அதனால் அவரை கீழ்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய தீர்மானிக்கபட்டது.அப்போது அந்த டாக்டர் கத்தோலிக்க கிறித்துவ அமைப்பை சேர்ந்தவர் என்பதால் CSI கிறிஸ்துவ அமைப்பு ஆட்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்…

கடைசியில் இந்துக்கள் அடக்கம் செய்யப்படும் மையான பூமியில் டாக்டர் உடல் அடக்கம் செய்யப்பட்டது’ என்று கூறியிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் ஏற்கெனவே பல குழப்பங்கள் உள்ள போது கிஷோர் கே ஸ்வாமி இவ்வாறு மத ரீதியான சிக்கலை வெளிப்படையாக சொன்னதால் மேலும் பல சர்ச்சைகள் எழுந்துள்ளது.

https://m.facebook.com/story.php?story_fbid=10216614435461704&id=1484264832