மனதில் எதிர்மறை எண்ணங்களை நுழைய விடாமல் தடுக்கும் விண்ட் சைம்!

0
150

நமக்கு தொடர்ச்சியாக அதிர்ஷ்டங்கள் ஏற்படவும், வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் நுழையாமல் தடுக்கவும் விண்ட் சைம்கள் உபயோகிப்பதால் ஏற்படும் பலன்கள் தொடர்பாக இங்கே தெரிந்து கொள்ளலாம்.

உலோகங்களைக் கொண்டு செய்யப்பட்ட இந்த விண்ட் சைம்கள் தற்போது நம்முடைய நாட்டிலும் பரவலாக விற்கப்படுகிறது மக்களில் பலரும் இதனை வாங்கி தங்களுடைய வீடுகளில் தொங்க விடுகிறார்கள்.

சீன வாஸ்து பரிகார முறையாக இந்த கருவிகள் கருதப்பட்டாலும் பழங்கால இந்தியாவில் சிற் சில மணிகளை கோர்த்து கோவில்களில் காற்று வீசும் போது ஒலி எழுப்பும் வகையில் இதனை உபயோகப்படுத்துகிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

உலோகங்களைக் கொண்டு செய்யப்பட்ட இந்த வின்ட் சைம்கள் காற்றில் அசையும் போது தூங்கிக் கொண்டிருக்கும் உலோக குழாய்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒரு விதமான ஆன்மீக சக்தி கொண்ட ஒலியை எழுப்புகிறது. இந்த ஒலிக்கு நம்முடைய வீட்டை சுற்றி இருக்கும் பகுதிகளில் நேர்மறை அதிர்வுகளை அதிகம் பரப்பும் தன்மை இருக்கிறது.

அதோடு இந்த ஒலிக்கு மனிதர்களின் மனதில் தீய எண்ணங்கள் மற்றும் தீய சிந்தனைகள் ஏற்படாமல் தடுக்கும் சக்தி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. வீட்டினுள் வெளிப்புற சூழல்கள் மற்றும் நபர்களால் அனுப்பப்படும் எதிர்மறை அதிர்வுகளை வீட்டிற்குள் வரவிடாமல் விரட்டும் தன்மை அதிகம் கொண்டது என்றும் சொல்லப்படுகிறது.

இந்த கருவி தொங்கவிடப்பட்டு இருக்கும் வீடுகளில் துஷ்ட சக்திகள் நுழைய முடியாது இந்த கருவி அடிக்கடி எழுப்பும் ஒலியை கேட்பவர்களுக்கு உடல் மற்றும் மனநிலை நன்றாக இருக்கும்.

தொடர்ந்து பல அதிர்ஷ்டங்கள் ஏற்படும். தொழில் வியாபாரம் அளித்தவற்றில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும். செல்வநிலை அதிகரிக்கும் எல்லாவற்றிலும் வெற்றி பெறும் நிலையையும் உண்டாக்கும்.

இந்த கருவிகளை வீட்டின் தலை வாசலுக்கு மேலாக தொங்கு விடுவது நல்லது.

Previous articleவயிற்றில் உள்ள ஒட்டு மொத்த கழிவு போக வேண்டுமா? இந்த கிழங்கு போதும்!
Next articleஇந்தப் பொருட்களை தலையணையின் அடியில் வைத்து உறங்கினால் மட்டும் போதும்! முழு விவரங்கள் இதோ!