இந்தப் பொருட்களை தலையணையின் அடியில் வைத்து உறங்கினால் மட்டும் போதும்! முழு விவரங்கள் இதோ!

0
625

இந்தப் பொருட்களை தலையணையின் அடியில் வைத்து உறங்கினால் மட்டும் போதும்! முழு விவரங்கள் இதோ!

ஒரு சிலருக்கு எப்பொழுதும் பணக்கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும் அதனை எவ்வாறு சரி செய்வது என நினைத்து அனைத்து பரிகாரங்களையும் முயற்சி செய்து வருவார்கள் ஆனால் தற்போது இந்த பதிவில் காணும் பரிகாரத்தை மட்டும் நீங்கள் செய்தால் பணம் மலை போல் குவியும் என்பது நம்பிக்கை.

நீங்கள் தூங்கும் பொழுது தலையணைக்கு அடியில் எந்த பொருள் வைத்து உறங்கினால் என்ன பலன் என்பதை காணலாம். முதலில் எலுமிச்சை பழம். இதனை நம் தலையணையில் அடியில் வைத்து உறங்கும் பொழுது நமக்கு இருக்கும் கண் திருஷ்டி அனைத்தும் நீங்கும். மேலும் நோய்களால் பாதிக்க பட்டிருப்பவர்கள் அனைவரும் உறங்கும் பொழுது தலையணைக்கு அடியில் எலுமிச்சை பழம் வைத்து படுக்க வேண்டும்.

அதிக கண் திருஷ்டி மற்றும் காரிய தடை இருப்பவர்கள் ஒரு சிறிய சிகப்பு நிற துணி அல்லது மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் சிறிதளவு கல் உப்பு வைத்து மூட்டை போல் கட்டி தொடர்ந்து ஏழு நாட்கள் உங்கள் தலையணையின் அடியில் வைத்து உறங்க வேண்டும்.

ஏழாவது நாள் முடிவில் அந்த உப்பை தண்ணீரில் கரைக்க வேண்டும். அடுத்ததாக உங்களுக்கு நல்ல பெயர் புகழ் கிடைக்க வேண்டும் என்றால் தலையணையின் அடியில் சிறிதளவு சந்தனம் வைத்து உறங்க வேண்டும். அதையடுத்து உங்கள் உறவுமுறைக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்க ஒரு சிறிய வெள்ளி நாணயத்தை தலையில் அடியில் வைத்து உறங்க வேண்டும்.

Previous articleமனதில் எதிர்மறை எண்ணங்களை நுழைய விடாமல் தடுக்கும் விண்ட் சைம்!
Next articleபார்லரே தேவையில்லை 15 நிமிடம் இருந்தால் மட்டும் போதும்! உங்கள் முகம் பளிச்சிடும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here