மது பிரியர்களே.. உங்கள் வீடு தேடி மது பாட்டில் வரப்போகிறது!! இனி டாஸ்மாக் பக்கமே போக வேண்டாம்!

Photo of author

By Divya

மது பிரியர்களே.. உங்கள் வீடு தேடி மது பாட்டில் வரப்போகிறது!! இனி டாஸ்மாக் பக்கமே போக வேண்டாம்!

தமிழகத்தில் மதுக்கடைகள்(டாஸ்மாக்) மூலம் அரசுக்கு அதிகப்படியான வருவாய் கிடைத்து வருகிறது.தமிழக அரசின் முக்கிய வருவாயாக டாஸ்மாக் திகழும் நிலையில் பொது மக்களின் எதிர்ப்பால் மெல்ல மெல்ல மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை கண்டறிந்து அதை நிரந்தரமாக மூடும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.இந்த திட்டம் ஆமைபோல் நகர்ந்து கொண்டிருக்கும் அதேவேளையில் சட்ட விரோத கள்ளச்சாராய விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது.

குடி வீட்டையும்,நாட்டையும் கெடுக்கும்.குடி குடியை கெடுக்கும்.மதுப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்று பல வசனங்களை படித்தாலும் குடிமகன்கள் மட்டும் திருந்தியபாட்டிலை.தமிழகத்தில் மதுவிற்கு அடிமையானவர்களில் இளைஞர்களே அதிகம்.

மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த வேண்டுமென்று பொதுமக்கள் ஒருபுறம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் மறுபுறம் ஆன்லைன் டெலிவரி மூலம் மதுபானம் ஆடர் செய்யும் சேவையை ஸ்விக்கி,சோமேட்டோ போன்ற உணவு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இதனால் ஆன்லைன் மூலம் மதுபானங்கள் ஆர்டர் செய்வது அதிகரித்து வருகிறது.பால்,தயிர் போன்ற உணவுப்பொருட்களை போன்றே மது பானங்களும் டோர் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.அமர்ந்த இடத்தில் இருந்தபடி பீர்,ஒயின் போன்ற மாதுபானங்களை பெற முடியும் என்பதால் மது பிரியர்கள் ஆர்வத்துடன் ஆர்டர் செய்த வண்ணம் உள்ளனர்.

முதற்கட்டமாக சோதனை முயற்சியாக டெல்லி,கர்நாடகா,தமிழ்நாடு,கோவா,கேரளா போன்ற மாநிலங்களில் ஆன்லைன் டெலிவரி மூலம் மதுபான விற்பனை செய்து வரும் உணவு டெலிவரி நிறுவனம் அதன் வரவேற்பை பொறுத்து சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டு வருகிறது.

இந்த மதுபானம் டோர் டெலிவரி சேவை நாட்டின் பெருநகரங்களில் மட்டும் வழங்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.