தலைமுடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக இருப்பது பொடுகு.மழைக்காலங்களிலும்,குளிர்காலங்களிலும் இந்த பொடுகு பாதிப்பை பலரும் சந்திக்கின்றனர்.குளிர்காலத்தில் நிலவும் வறண்ட காற்றால் தலையில் ஈரப்பதம் குறைகிறது.இதனால் தலையில் செதில்கள் உருவாகி அரிப்பு,எரிச்சலை ஏற்படுத்தும்.இந்த பொடுகை போக்க வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து ஹேர் மாஸ்க் தயாரித்து பயன்படுத்துங்கள்.
1)தேன் – ஒரு தேக்கரண்டி
2)தயிர் – 1/4 கப்
ஒரு கிண்ணத்தில் தயிர் மற்றும் தேனை சொல்லிய அளவுபடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.பிறகு இதை தலை முழுவதும் அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள்.பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசுங்கள்.இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு இரண்டு முறை உபயோகித்து வந்தால் பொடுகு தொல்லை ஏற்படாது.
1)எலுமிச்சை சாறு
2)தேங்காய் எண்ணெய்
கிண்ணம் ஒன்றை எடுத்து இரண்டு தேக்கரண்டி சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டிஎலுமிச்சை சாறு கலந்து தலை முழுவதும் அப்ளை செய்யவும்.
20 நிமிடங்களுக்கு பிறகு வெது வெதுப்பான நீரில் கூந்தலை அலசி சுத்தப்படுத்தவும்.இப்படி செய்தால் பொடுகு தொல்லை கட்டுப்படும்.
1)வாழைப்பழம்
2)ஆலிவ் எண்ணெய்
ஒரு கனிந்த வாழைப்பழத்தை தோல் நீக்கிவிட்டு அதன் சதை பற்றை போஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரத்திற்கு ஊறவிடவும்.
பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலை முடியை அலசி சுத்தம் செய்யவும்.இப்படி செய்து வந்தால் பொடுகு தொல்லை முழுமையாக நீங்கும்.