என்கவுண்டர் லிஸ்டில் இத்தனை ரவுடிகளா? சாமியை பிடித்து போலீசார் விசாரணை!

Photo of author

By Rupa

என்கவுண்டர் லிஸ்டில் இத்தனை ரவுடிகளா? சாமியை பிடித்து போலீசார் விசாரணை!

இந்த காலகட்டத்தில் அனைவரையும் விட சாமியார் என்ற பெயரில் வேடமணிந்து இருப்பவர்கள்தான் அதிகம் அவ்வாறு இருப்பவர்கள் பாலியல் புகார்களை நானும் அல்லது சொத்துக்குவிப்பு வழக்குகளிலும் வசமாக சிக்கிக் கொள்கின்றனர்.அந்த நிலையில்தான் சாமியார் ஆசாமி ஆகும் நிலை ஏற்படுகிறது.புகழ்பெற்று விளங்கும் அனைத்து சாமியார்களும் ஏதோ ஒரு சட்டத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.அந்த வகையில் திருச்சி அல்லித்துறை பகுதியில் வசித்து வருபவர் தான் பாலசுப்பிரமணியன் என்கிற தேஜஸ் ஸ்வாமி.

இவருக்கு வயது 31,இவர் எதிர்காலத்தில் நடப்பதை முன் கூட்டியே கூறுவதில்  வல்லமை படைத்தவர் என்றும் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றனர்.ஆனால், எதிர்காலத்தில் நடப்பது எப்படி தெரிகிறது என்ற உண்மை தற்பொழுது வெட்டவெளிச்சமாக வெளிவந்துள்ளது.தேஜஸ் சுவாமிகளும் ,வழக்கறிஞர் ஒருவரும்  உரையாடிய ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையில் அவரை சிக்க வைத்துள்ளது.அவர்கள் அந்த ஆடியோவில்  பேசியதாவது, தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பல புதிய உயர் அதிகாரிகள் தனக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாக தேஜஸ் சுவாமிகள் வழக்கறிஞரிடம் கூறியுள்ளார். மேலும் அவர், தமிழ்நாட்டில் மொத்தம் 42 ரவுடிகளின் பட்டியல் என்கவுண்டர்க்கு தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எப்பொழுது வேண்டுமானாலும் அந்த ரவுடிகளை என்கவுண்டர் செய்யலாம் என வழக்கறிஞரிடம் கூறியுள்ளார்.அதனால் உங்களுக்கு தெரிந்த ரவுடிகளை கவனமாக இருக்கச் சொல்லுங்கள் என்றும் வழக்கறிஞருக்கு தேஜஸ் ஸ்வாமி முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும் அவர் கூறியதாவது, நான் சைரன் வைத்த காரில் சென்று சேகர் பாபுவை நேரில் சந்தித்து பேசியதாகவும் கூறியுள்ளார். இவ்வாறான ஆடியோ பதிவை திருச்சி காவல்துறையினர் கேட்டு தேஜஸ் சுவாமிகளைப் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் திருச்சி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து தேஜஸ் ஸ்வாமி எனப்படும் பாலசுப்ரமணியனினை விசாரணைக்கு அழைத்து வந்துள்ளனர் இரவு முதல் அந்த தனிப்படை பாலசுப்ரமணிய னிடம் விசாரணை செய்து வருகிறது.