இந்த ஆப் இருந்தால் உங்கள் பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தை 5 நிமிடத்தில் எடுத்திடலாம்!!

0
192
With this app you can withdraw money from your PF account in 5 minutes!!
With this app you can withdraw money from your PF account in 5 minutes!!

இந்த ஆப் இருந்தால் உங்கள் பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தை 5 நிமிடத்தில் எடுத்திடலாம்!!

அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் ஓய்வு காலத்திற்கு பிறகு நிதி தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு கொண்டுவந்த திட்டங்களில் ஒன்று வருங்கால வைப்பு நிதி திட்டம்.ஊழியர்களின் பணி காலத்தின் போது குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து ஓய்வு காலத்தில் ஓய்வூதியமாக EPFO அமைப்பு வழங்குகிறது.

முன்பெல்லாம் ஊழியர்கள் தங்களது பணி காலத்தில் PF தொகையை எடுப்பது கடினமாக இருந்தது.ஆனால் தற்பொழுது ஆன்லைன் மூலம் EPF உறுப்பினர்கள் தங்களின் PF தொகையை எளிதில் பெற்றுக் கொள்ள முடியும்.

வருங்கால வைப்பு நிதியில் இருக்கின்ற பணத்தை பெறுவதற்கு ஊழியர்கள் தங்கள் மொபைலில் UMANG செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.இந்த UMANG செயலி வருங்கால வைப்பு நிதி தொடர்பான பல்வேறு சேவைகளை வழங்குகிறது.

UMANG செயலி மூலம் PF பணம் பெறுவது எப்படி?

1.முதலில் உங்கள் மொபைலில் UMANG செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

2.பின்னர் EPFO சேவைகளை அணுகி “உரிமைகோரலை உயர்த்தவும்” என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

3.அதன் பின்னர் உங்கள் UNA நம்பரை உள்ளீடு செய்து OTP எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

4.இவ்வாறு செய்த பிறகு உங்கள் மொபைலுக்கு ஒரு ரெபரன்ஸ் நம்பர் வழங்கப்படும்.இந்த நம்பரை பயன்படுத்தி உங்கள் PF விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

UMANG செயலியில் EPF இருப்புத் தொகையை கண்டறிவது எப்படி?

முதலில் UMANG செயலியை திறந்து EPF விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.பிறகு “Employee Centric Services” என்ற பிரிவில் இருக்கின்ற “View Passbook” என்பதை செலக்ட் செய்யவும்.அதன் பின்னர் உங்கள் UAN நம்பரை என்டர் செய்தால் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும்.அந்த எண்ணை என்டர் செய்து உங்கள் EPF இருப்புத் தொகை விவரத்தை அறிந்து கொள்ள முடியும்.

Previous articleSAVINGS SCHEME: உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கும் சிறந்த முதலீட்டு திட்டம் இது மட்டுமே!!
Next articleURIC ACID: யூரிக் அமிலத்தை இயற்கையான முறையில் குறைக்க வேண்டுமா? அப்போ இந்த புட்ஸ் ட்ரை பண்ணுங்க!