2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவது வாபஸ்.. உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு!!
ரிசர்வ் வங்கியானது 2016 ஆம் ஆண்டு தான் ரூ. 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. ஏனென்றால் இதர நோட்டுகளின் தேவையானது சற்று அதிகமாக இருந்ததால் அதனை சரி செய்யும் வகையில் இந்த நோட்டை அறிமுகம் செய்தது. எனவே அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றது.
தற்பொழுது போதுமான அளவிற்கு இதர ரூபாய் நோட்டுகள் கையிருப்பில் உள்ளதால் 2019 ஆம் ஆண்டு முதல் ரூ 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது.எனவே 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றதை போல் 2000 ரூபாய் நோட்டையும் திரும்ப பெற போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். எனவே மக்கள் நாள் ஒன்றுக்கு 20000 வரை வங்கியில் கொடுத்து 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி செப்டம்பர் 30ஆம் தேதி வரை மட்டுமே இதற்கு காலக்கெடுவும் ஒதுக்கியுள்ளனர். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தனி நபர் ஒருவர் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது எனவும் இதில் ரிசர்வ் வங்கி தலையிடக்கூடாது எனக் கூறியுள்ளனர்.இந்த வழக்கானது விசாரணைக்கு வந்து ரிசர்வ் வங்கியை பதில் அளிக்குமாறு நீதிமன்றம் கூறியது.
இந்த வழக்குக்கு பதில் அளிக்கும் வகையில் ரிசர்வ் வங்கியானது, சில பொருளாதார கோட்பாடுகளால் இவ்வாறு 2000 ரூபாய் நோட்டுகள் பெறப்படுகிறது என தெரிவித்தது.ஆனால் நீதிபதிகள் இதற்கு தீர்ப்பு அளிக்காமல் வழக்கை ஒத்தி வைத்தனர். இந்த வழக்கானது இன்று மீண்டும் அமர்வுக்கு வந்த தீர்ப்பு வழங்க உள்ளது. மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்றால் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவது வாபஸ் வாங்கப்படுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.