கர்ப்பிணியாக நடித்த மனைவி, விபரீதத்தில் முடிந்த நாடகம்.

0
224
Representative image

புதுச்சேரியில் பெண் ஒருவர் எஜமான் திரைப்பட பாணியில் கர்ப்பமாக இருப்பதாக நாடகமாடி வந்துள்ளார்.

இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மீனா நடிப்பில் வெளியான திரைப்படம்.

இந்த திரைப்படத்தில் மீனா தான் கர்ப்பமாக இருப்பதாக பொய்யாக கூறி வயிற்றில் தலையணை வைத்து நாடகமாடி இருப்பார். இறுதியில் இறந்தும் விடுவார்.

பாண்டிச்சேரியில் இதே போன்று பெண் ஒருவர் செய்துள்ளார்.

புதுச்சேரி தர்மாபுரி பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் கர்ப்பமான தனது மனைவியை ஜிப்மர் மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுப்பதற்காக அழைத்து சென்றுள்ளார், ஆனால் அந்த பெண் திடீரென மாயமாகி உள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் தேடி வந்திருந்த நிலையில் , அந்த பெண்ணே கணவருக்கு போன் செய்து தன்னை யாரோ கடத்தி வந்து விட்டதாகவும்., மேலும் தன் வயிற்றில் உள்ள குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

பின்பு காவல் துறையினர் அவரது செல்போன் என்னை தொடர்பு கொண்டு புதுச்சேரிக்கு வரவழைத்தனர். அங்கு மகளிர் போலீசார் விசாரணை செய்த போது அந்த பெண் தான் கர்ப்பமாக இருப்பதாக நாடகமாடியது தெரிய வந்தது.

போலீசார் அந்த பெண்ணை எச்சரித்து உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.

Previous articleதமிழக சீருடையை தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பால் காவலர்களுக்கு வந்த சோதனை!
Next article179 கர்ப்பிணிகள் உயிரிழப்பு தமிழகத்தை அதிரவைக்கும் உண்மை