வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த கணவன்.. குழந்தைகளை கொன்று விட்டு இளம்பெண் தற்கொலை..!

குழந்தைகளை கொலை செய்து விட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் அகீல் அகமது. இவருக்கு திருமணமாகி உஸ்னா கௌசர் என்ற மனைவியும் மூன்று குழந்தைகள் உள்ளனர். அகீல் அகமது அந்த பகுதியில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது.

அகமதுவிற்கு வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது.து குறித்து உஸ்னா கணவனிடம் கேட்டு வந்ததாக தெரிகிறது. இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மன உளைச்சலுக்கு ஆளான அவர் உணவில் விஷம் வைத்து கொலை செய்து விட்டு குழந்தைகளுக்கு கொடுத்து கொலை செய்து விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனின் திருமணத்தை மீறிய உறவால் குழந்தைகளை கொன்று விட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன உளைச்சல் ஏற்படும் போது யாரிடமாவது மனம் விட்டு பேசுங்கள். அல்லது 104 என்ற எண்ணிற்கு அழைத்து இலவச ஆலோசனை பெறலாம்.