திருச்சியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம், இவரது மனைவி மீனா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் என மூன்று குழந்தைகள் உள்ளனர். பாலசுப்ரமணியம் வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வருகிறார். மீனாவும் அவர் அனுப்பும் பணத்தை கொண்டு பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து நல்ல முறையில் வாழ்ந்து வந்து இருக்கிறார்.
இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த சுரேஷ்க்கும், மீனாவுக்கும் நாளடைவில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில் தனது கணவருடன் வீடியோ கால் பேச சுரேஷ் மீனாவுக்கு உதவியுள்ளார், பின்னர் இது தகாத உறவாக மாறியுள்ளது.
மீனாவிடம் பணப்புழக்கம் அதிகம் இருப்பதை தெரிந்து கொண்ட சுரேஷ் தன்னையும் வெளிநாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளார். மீனாவும் இரண்டு லட்சம் வரை செலவு செய்து சுரேஷை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
சுரேஷ் வெளிநாடு சென்ற பிறகு மீனா அவரிடம் பேசுவதை குறைத்துள்ளார். இதனால் சுரேஷ் அவர் மீது சந்தேகம் அடைந்து சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் மீனா சுரேஷின் பெற்றோரிடம் சென்று சுரேஷுக்கு கொடுத்த இரண்டு லட்சத்தை கேட்டுள்ளார். சுரேஷின் பெற்றோர்கள் மீனாவை அவமானபடுத்தி அனுப்பி உள்ளனர். அதன்பிறகு மீனா கடந்த மாதம் 20ஆம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வெளிநாட்டில் இருக்கும் பாலசுப்ரமணியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் பாலசுப்ரமணியத்தால் ஊருக்கு வர முடியவில்லை. அதன்பின்னர் ஊருக்கு வந்த பாலசுப்ரமணியம் ஏதேச்சையாக மனைவி மீனாவின் செல்போனை பார்த்த போது அவருக்கு ஒரு பேரதிர்ச்சி காத்து இருந்தது.
மீனாவின் செல்போனில் சுரேஷ் அவரை நிர்வாணமாக வீடியோ கால் பண்ணுமாறு மிரட்டி இருந்தது தெரியவந்தது. மேலும் சுரேஷ் வீட்டில் மீனாவை அவமானப்படுத்தியது குறித்து மீனா பேசி வீடியோவும் எடுத்து வைத்திருக்கிறார்.
உடனே பாலசுப்ரமணியம் இதுகுறித்து போலீசில் புகாரளித்தார். இதுகுறித்து போலீசார் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எட்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

