புதுக்கோட்டை அருகே அழகிய நிலையில் கிடந்த இளம் பெண் சடலம்! தீவிர விசாரணையில் காவல்துறையினர்!

0
169

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகில் இருக்கின்ற பல்லவராயன் பத்தை கிராமத்தை சார்ந்தவர் திருச்செல்வம் இவருடைய மனைவி பழனியம்மாள் பழனியம்மாள் கடந்த 23ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், அதன் பிறகு காணாமல் போனார் என்று சொல்லப்படுகிறது.

உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தும் பழனியம்மாள் கிடைக்கவில்லை. ஆகவே இது தொடர்பாக காவல்துறையில் புகார் வழங்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பதிவு செய்து காணாமல் போன பழனியம்மாளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் தான் நேற்று பல்லவராயன் பத்தை கிராமத்திற்கு அருகில் உள்ள தொம்பராம் பட்டி பாதரை குளத்திற்கு செல்லும் வழியில் இருக்கின்ற தைல மர தோப்பில் பழனியம்மாள் உடல் அழுகிய நிலையில், சடலமாக கிடந்திருக்கிறது.

இது தொடர்பான தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இதற்கு நடுவே கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தும், பழனியம்மாளின் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்தும், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோர் நடத்திய பேச்சு வார்த்தையையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Previous article2 நாட்களில் 3 மாவட்டங்களுக்கு சுற்று பயணம்! முதலமைச்சரின் முழு பயணத் திட்டம் இதோ!
Next articleதிருப்பூர் அருகே கோர விபத்து! டேங்கர் லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!