கழுத்தில் காயங்களுடன், கைக்கால் கட்டப்பட்டு பெண் சடலம் கோணிப்பையில் கண்டுபிடிப்பு!

Photo of author

By Kowsalya

பஞ்சாபில் பெண்ணின் உடல், உடம்பில் காயங்களுடன் கை கால்கள் மெல்லிய கயிறால் கட்டப்பட்டு ஒரு சனல் பைக்குள் பெண்ணின் சடலத்தை சுற்றி அதை ஒரு கோணிப்பையில் போட்டு வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப்பில் உள்ள லூதியானா என்ற கங்கன் வால் என்ற பகுதியில் ருத்ர காலனியில் பெண்ணின் சடலம் சாக்குப் பைக்குள் ஒரு காலியான நிலப்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கு உள்ள மக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்தப் பெண்ணின் உடலில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் கூர்மையான முனைகள் கொண்ட காயங்கள் இருந்ததால் அந்தப் பெண் கொடூரமாக கொல்லப்பட்டு உள்ளதை உறுதி செய்தார்கள்.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட அந்த உடலை கை மற்றும் கால்களை சின்ன கயிறால் கட்டி, அந்தப் பெண்ணின் உடலை ஒரு சணல் பையில் சுற்றி, கோணிப்பையில் போட்டு அடைக்கப்பட்டுள்ளது.

சானேவால் காவல் நிலைய SHO சப் இன்ஸ்பெக்டர் பல்விந்தேர் சிங் , இறந்துபோன இந்தப் பெண் நேபால் பெண் போல இருப்பதாகவும், மேலும் அந்தப் பெண் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆகவும் இருக்கக் கூடும், என்று கூறினார்.

மேலும் அவர் கையில் ஒரு பச்சை குத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அது நேபாள மொழியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

மேலும் இறந்து போன இந்த பெண்ணை அடையாளம் காண சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். மேலும் உடலை அடையாளம் காண லூதியானாவில் குடியேறிய நேபாளத்தை சேர்ந்தவர்களையும் தொடர்பு கொண்டுள்ளோம் என்று சப்-இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.

மேலும் இந்த கொலையை பற்றி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.