இந்த வழிபாடு தலத்திற்கு பெண்கள் செல்ல தடை! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
17 ஆம் நூற்றாண்டில் டீவ்ல்லியில் சாந்தினி சவுக் பகுதியில் முகலாயர் காலகட்டத்தில் கட்டப்பட்ட ஜீம்மா மசூதி உள்ளது.அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
இந்நிலையில் இதன் மூன்று முக்கிய நுழைவாயில்களுக்கு வெளியே சிலோ நாட்களுக்கு முன்பு ஓர் அறிவிப்பு ஒன்று வைக்கப்பட்டது.அதில் பெண்கள் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பதாக அச்சிடப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பு தொடர்பாக பெண்ணுரிமை செயற்பாட்டாளர் ரஞ்சனா குமாரி கூறுகையில் இது முற்றிலும் ஏற்று கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.இந்த மனநிலை 10 ஆம் நுற்றாண்டு மனநிலையாக இருக்கின்றது.தற்போதுள்ளது ஜனநாயக நாடு.அவர்கள் எவ்வாறு பெண்களை வர கூடாது என கூறமுடியும் என பல கேள்விகளை எழுப்பினார்.
மற்றொரு பெண்ணுரிமை செயற்பாட்டாளர் யோகிதா பாயனா கூறுகையில் இந்த உத்தரவு நம்மை 100 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்து செல்கிறது.இவை பிற்போக்குத்தனமாக மட்டுமல்ல .பெண்களை பற்றி இந்த மதக் குழுக்களின் மனோபாவம் என்ன என்பதையும் காட்டுகிறது.
இதையடுத்து ஜீம்மா மசூதியின் ஷாகி இமாம் சையது அகமது புகாரி கூறுகையில் மிக புகழ் பெற்ற பாரம்பரிய கட்டிட வளாகத்தில் சில சம்பவங்கள் நடந்து வருகின்றது.அதனால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது ஒரு வழிபாட்டு தலம்.இதனை மக்கள் பெரிதளவு வரவேற்கின்றனர்.ஆனால் ஒரு சில பெண்கள் தனியாக வந்து தங்கள் ஆண் நண்பர்களுக்காக காத்திருக்கிறார்கள் அதனால் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மசூதி ,கோவில் மற்றும் குருத்வாரா என எதுவாக இருந்தாலும் அவை வழிபாட்டுக்குரிய இடம்.இந்த நோக்கத்துடன் வருபவர்களுக்கு எவ்வித தடையும் இல்லை.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஜீம்மா மசூதி ஷாகி இமாம் உடன் டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே .சக்சேனா நேற்று பேசினார்.அப்போது அவர் மசூதிக்குள் பெண்களுக்கு தடை விதிக்கும் அறிவிப்பை திரும்பப் பெற இமாம் ஒப்புக்கொண்டார்.