கறுப்பர் கூட்டத்தை தொடர்ந்து மேலும் ஒருவர் யூ ட்டியூப் விமர்சனத்தால் கைது.!!

0
191

மும்பையில் வடகிழக்கு மக்களை புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் நாகலாந்து போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்மணி, ஹேமா செளத்ரி என்றும் இவர் ஒரு விலங்கு நல ஆர்வலர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

ஹேமா செளத்ரி கடந்த ஜூலை 7 ஆம் தேதி தனது யூட்டியூப்பில் ஒரு வீடியோவை பேசி வெளியிட்டிருந்தார். அதில் வடகிழக்கு மக்களைப் பற்றி அநாகரிகமாக பேசியது பலரிடையே கோபத்தை ஏற்படுத்தியது. மேலும் நாகலாந்து மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருந்தது. இந்த வீடியோவின் காரணமாக அப்பெண் உடனடியாக நாகலாந்து போலீசாரால் ஓஷிவாராவில் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இவர் மீது பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்களை தரக்குறைவாக பேசியதும், அவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டியதாகவும் அவர்மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார். தமிழகத்தில் கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் போலியாக கும்பல் ஒன்று கந்த சஷ்டி கவசத்தை பற்றி பேசி சுரேந்திரன் மற்றும் செந்தில்வாசன் ஆகிய இருவரும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

Previous articleஆந்தைக்கு டிரைவராக மாறிய காவலர்! பறவையை காப்பாற்ற காரில் பயணித்த உயிர்நேயம்.!!
Next articleஒரே ஜாலிதான்.! அரசு மருத்துவமனையில் ஹாயாக சுற்றித் திரிந்த பன்றிகள்!