பெண் தூக்கிட்டு தற்கொலை: கூண்டோடு மாட்டிய கணவன் வீட்டார்?

0
165

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள எருமனுார் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது வயது 24 இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஷோபனா வயது 21 என்பவருக்கும் கடந்த 3 வருடத்திற்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்து முடிந்தது.

இவர்களுக்கு தற்போது ஒன்றரை வயதில் விஷோத் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் சோபனா நேற்று தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து
தகவலறிந்த சோபனாவின் தங்கை தனது அக்காவை அவளின் கணவர் வீட்டார் கொடுமை செய்து தூக்கில் மாற்றி விட்டனர் என்று போலீசாரிடம் புகார் அளித்தார்.

ஷோபனாவின் தங்கை அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோபனாவின் செல்போனை சோதனை செய்தனர்.அதில் அவர் தற்கொலைக்கு முன்பு ஆடியோவும் வீடியோவும் பதிவிட்டுள்ளார் என்பது தெரியவந்தது.அதில் சோபனா கூறியவாறு இவர்களுக்கு எவ்வளவு நகை கொடுத்தாலும் ஈடாகாது தன்னை வரதட்சணை கேட்டு தினம்தினம் துன்புறுத்தியதால் வாழ வழி தெரியாமல் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்றும் எனது மகனை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று அதில் அவர் பதிவிட்டிருந்தார்.
இதுமட்டுமின்றி தனது தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் தன் கணவன் வீட்டார் என்றும் வீடியோ பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை தொடர்ந்து, இது குறித்து விருத்தாசலம் துணை காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் விசாரணை மேற்கொண்டு ஷோபனாவின் கணவர் விஜயகுமார், மாமனார் தங்கவேல், மாமியார் செல்வராணி ஆகியோரை கைது செய்தனர். தற்கொலைக்க முன் பெண் வெளியிட்ட வீடியோ காண்போர் கண்களை கண்ணீர் குளமாக்கியுள்ளது.மேலும் எத்தனை வருட காலங்கள் ஆனாலும் எத்தனை சட்டம் பிறப்பித்தார் பெண்களுக்கு எதிரான வரதட்சனை கொடுமை ஓய்ந்தபாடில்லை.

Previous articleதிருக்குறள் பற்றி மோடி மாஸ் ட்விட்.! உலகமறை போற்றும் உண்மை வழிகள்.!!
Next articleகுட்டை பாவாடையில் மொத்த பின்னழகையும் காட்டும் சாக்ஷி அகர்வால்!!!