80 வயது மூதாட்டிக்கு உதவிய பெண் காவலர்; இணையத்தில் குவியும் பாராட்டு..!!

Photo of author

By Jayachandiran

80 வயது மூதாட்டிக்கு உதவிய பெண் காவலர்; இணையத்தில் குவியும் பாராட்டு..!!

Jayachandiran

Updated on:

சென்னை தியாகராய நகரில் வசித்து வரும் 80 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஐதராபாத்தில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு செல்ல விமானம் மூலம் செல்ல தயாரான நிலையில் காவல்துறையிடம் அவரது மகள் கடந்த 29 ஆம் தேதி மாம்பலம் காவல்நிலையத்திற்கு தொடர்பு கொண்டு, தனது அம்மா வசந்தா தி.நகரில் உள்ள வீட்டில் தனியாக வசித்து இருப்பதாகவும், கொரோனா ஊரடங்கால் அவரை அழைத்து வரவில்லை என்றும், அவருக்கான இ-பாஸ் மற்றும் விமான பயணசீட்டும் எடுத்துள்ளதால் விமான நிலையம் அழைத்து செல்ல உதவி தேவை என்று கூறியுள்ளார்.

 

இதையடுத்து மாம்பலம் காவல்நிலைய ஆய்வாளர் பெண்காவலர் மகாலஷ்மி என்பவரை மூதாட்டிக்கு உதவுமாறு தகவலை கூறியுள்ளார். இதன்பின்னர் வசந்தா தங்கியிருந்த குடியிருப்பு பகுதிக்கு சென்று தகவலை கூறிய பின்னர் அவரது பொருட்கள் மற்றும் உடமைகள் ஆகியவை எடுத்துக்கொண்டு, சொந்த செலவில் வாடகை கார் ஒன்றை புக் செய்து விமான நிலையம் வரை பாதுகாப்புடன் சரியான முறையில் அனுப்பி வைத்தார்.

ஐதராபாத்தில் உள்ள தனது மகள் இல்லத்திற்கு சென்ற மூதாட்டியும் அவரது மகளும் சரியான நேரத்தில் உதவிபுரிந்த காவலர் மகாலஷ்மிக்கும், காவல்துறைக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் என்று சமூகவலைதளமான பேஸ்புக் இணையத்தின் மூலமாக நன்றியை தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவலர் மகாலஷ்மியை நேரில் அழைத்த காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் வெகுமதி வழங்கி பாராட்டினார். வயதான பெண்மணிக்கு உதவிய பெண் காவலருக்கு சமூகவலைதளங்களில் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.