இன்று (21.9.2020) தமிழக தலைமைச் செயலகத்தில், எடப்பாடி பழனிசாமி எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனதினால் தயாரிக்கப்பட்ட மின்சாரம் மற்றும் சூரிய சக்தி மூலம் இயங்கும் 13 வடிவங்களிலான புதிய ஆட்டோக்கள் இன்று (21.9.2020) முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார் .
தமிழகத்தில் சமீப காலமாக அதிக அளவில் நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட பொருட்கள் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளிலிருந்து சுமார் 8255 கோடி மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்துள்ளனர். இதனால் சுமார் 35,520-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதியதாக வேலைவாய்ப்பு வழங்கி 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்பொழுது ஆட்டோ எலக்ட்ரிக் முதலீட்டு மொபைல் நிறுவனமானது 140 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சூரிய சக்தி மற்றும் மின்சாரம் மூலம் இயங்கும் 13 வடிவங்களான புதிய ஆட்டோக்களை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், இந்த ஆட்டோவில் சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளும் மேற்கொள்ளப்படுவதாகவும், எலக்ட்ரிக் ஆட்டோ ஓட்டுநர்கள் பெரும்பான்மையானோர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ,இன்று தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.