உணவுக்காக உடலுறவு வரிசை கட்டி நிற்கும் பெண்கள்!! இராணுவ வீரர்கள் கொடுக்கும் உச்சக்கட்ட கொடுமை!!
சூடானில் இரு ராணுவ படைகளுக்கு இடையே போர் நடைபெற்று வருகிறது. எஸ் எஃப்எஸ் என்று சொல்லப்படும் அமைப்பில் இரண்டு லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். இதனை அப்தெல் என்பவர் தலைமை வகிக்கிறார். இதேபோல ஆர் எஸ் எப் எனப்படும் அமைப்பில் ஒரு லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். இதற்கு முஹம்மது ஹம்தான் என்பவர் தலைமை வகிக்கிறார். இரண்டு ராணுவ வீரர்களும் யார் ஆட்சியைப் பிடிப்பது என்பதில் போரை நடத்தி வருகின்றனர்.
இந்தப் போரால் ஏராளமான மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதில் கொரில்லா அமைப்பு அதாவது ஆர் எஸ் எப் எனப்படும் ராணுவ வீரர்கள் தான் பல பகுதிகளை தனது கைகளில் வைத்துள்ளனர். தனது கைவசம் உள்ள பகுதியில் இருக்கும் மக்களை மிகவும் துன்புறுத்துவதையே அன்றாட வேலையாக செய்து வருகின்றனர் என பத்திரிகை ஊடகங்கள் மூலம் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
அதில் பாதிப்படைந்த பெண் அளித்துள்ள பேட்டியில், இந்த ஆர்எஸ்எப் ராணுவ படையினர் உடலுறவு கொள்வதற்காக பெண்களை மிகவும் வற்புறுத்துகிறார்கள். தினசரி வரிசையில் நிற்க வைத்து ஒருவர் பின் ஒருவராக உடலுறவு கொள்ள வேண்டுமென்று கட்டாயப்படுத்துகின்றனர். ஒப்புக்கொள்ள மறுக்கும் பெண்களை அடிப்பது ஏன் உயிரைக் கொல்லக் கூட துணிவதில்லை.
மேலும் பெண்களும் தங்களுக்கு தேவையான அன்றாட பொருள்களை வாங்குவதற்காகவும் தங்கள் குழந்தைகளுக்காகவும் இதற்கு சம்மதம் தெரிவிக்கவும் செய்கின்றனர். உணவுக்கு கூட இவர்களுடன் உடலுறவு இருந்தால் மட்டும்தான் தங்களுக்கு கிடைக்கும் என்று கண்ணீர் மல்க அப்பகுதி பெண்மணி பேட்டியளித்துள்ளார்.