பெண்கள் தங்களை தாங்களே தைரியப்படுத்திக்கொள்ள வேண்டும் – அமைச்சர் கீதா ஜீவன்

0
147
Minister Geetha Jeevan
Minister Geetha Jeevan

பெண்கள் தங்களை தாங்களே தைரியப்படுத்திக்கொள்ள வேண்டும் – அமைச்சர் கீதா ஜீவன்

பெண்கள் தங்களை தாங்களே தைரியப்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

மாநில அளவிலான எஸ்.என்.ஜெ கோப்பைக்கான 70 ஆம் ஆண்டு கைப்பந்து போட்டியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகம் சார்பில் நடைபெறும் 70 ஆம் ஆண்டு மாநில அளவிலான கைப்பந்து போட்டியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.

எஸ்.என்.ஜெ கோப்பைக்கான மாநில அளவிலான போட்டியை தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகம் சார்பில் ஆண்டும்தோறும் நடத்தி வருகிறது.ஆண்களுக்கான கைப்பந்து போட்டி கடந்த 11ஆம் தேதி முதல் தொடங்கிய நடைபெற்று வரும் நிலையில் மாநில அளவில் பெண்களுக்கான கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்து அமைச்சர் கீதா ஜீவன் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் :-

முதலமைச்சர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்டத்தை நேரடியாக கண்காணித்தும் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறார்.பெண்கள் தங்களை தாங்களே தைரியப்படுத்திக்கொள்ள வேண்டும்.

கற்ற கல்விக்கு ஏற்ப வாழ்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
சிறந்த வீரங்கனைகளை கண்டறிய இந்த போட்டி உதவியாக இருக்கும் என்றும்
முதலமைச்சர் விளையாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார். விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது முக்கியமில்லை என பேசினார்.

இதனிடையே முன்னாள் இந்திய கைப்பந்தாட்ட வீரர் பாஸ்கரன் தெரிவிக்கையில் தமிழகத்தில் தற்போது கைப்பந்தாட்டம் வளர்ச்சி பெறுவதற்கு முன்னாள் தலைவராக இருந்த சிவந்தி ஆதித்தனாரின் பல்வேறு உதவிகளும் நலத்திட்டங்களும் முக்கிய காரணம் எனக் குறிப்பிட்டவர் , தற்போது பள்ளி சிறார்கள் மத்தியிலும் கைப்பந்தாட்ட பயிற்சி வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

Previous articleதடை உத்தரவை மீறியதால் வாலிபர் ஒருவர் மாயம்! ஆன்லைன் விளையாட்டு மீது மனு தாக்கல்!
Next articleதவறான சிகிச்சையளித்த மருத்துவர் நோயாளிக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு