பெண்கள் பூப்பெய்த பின்னர் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சியை சந்திக்கின்றனர்.இந்த மாதவிடாய் சுழற்சியை பெண்கள் அவர்களின் 50 வயது நிறைவடையும் வரை சந்திக்கின்றனர்.
பெண்களின் மாதவிடாய் காலத்தில் கோயிலுக்கு செல்லக் கூடாது,ஊறுகாயை தொடக் கூடாது,சமையலறைக்குள் செல்ல கூடாது,பூக்களை பறிக்க கூடாது,கறிவேப்பிலை செடியை தொடக் கூடாது என்பன போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.அதேபோல் மாதவிலக்கு முடியும் வரை பெண்கள் வீட்டின் ஒதுக்கு புறத்தில் தான் படுத்துறங்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இன்றும் பலரது வீடுகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.கிராமபுறங்களில் மட்டுமல்ல நகர் புறங்களிலும் மாதவிடாய் காலத்தில் பெண்களை தனிமைபடுத்தும் நிகழ்வு பின்பற்றப்பட்டு வருகிறது.
குறிப்பாக தென் மாவட்ட கிராமங்களில் இந்த பழக்கம் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது.பெண்களின் மாதவிடாய் காலத்தில் உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.அது மட்டுமின்றி உடலில் இரத்த ஓட்டம் குறைந்து நோய் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது.இந்நேரத்தில் உடலை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சுத்தமான நாப்கின்ஸ் பயன்படுத்த வேண்டும்.உள்ளாடைகளை வெந்நீர் பயன்படுத்தி சுத்தம் செய்து வெயிலில் காயவைத்து பயன்படுத்த வேண்டும்.பிறப்புருப்பில் இருந்து வெளியேறும் இரத்தத்தில் கிருமிதொற்று உள்ளாடைகளில் பாடிய அதிக வாய்ப்பிருக்கிறது.எனவே அந்த உள்ளாடைகளை நன்கு சுத்தம் செய்த பிறகே பயன்படுத்த வேண்டும்.3 மணி நேரத்திற்கு ஒருமுறை நாப்கினை மாற்ற வேண்டும்.
இந்த மாதவிடாய் காலத்தில் உடல் உஷ்ணம் அதிகமாக இருப்பதால் ஒரு குறிப்பிட்ட பொருட்களை தொடும் போது அது கெட்டு போக்கக் கூடும் என்று கருதி பெரியவர்கள் இதுபோன்ற கட்டுப்படுகளை கடைபிடிக்கின்றனர்.ஆனால் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விதிக்கப்படும் அனைத்து கட்டுப்பாடுகளும் வெறும் கட்டுக்கதை தான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.ஊறுகாயில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் தசைபிடிப்பு குறைக்கிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.