மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர்!!! 20 பேர் கொண்ட இந்திய ஹாக்கி மகளிர் அணி அறிவிப்பு!!!

0
30
#image_title

மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர்!!! 20 பேர் கொண்ட இந்திய ஹாக்கி மகளிர் அணி அறிவிப்பு!!!

நடப்பாண்டுக்கான ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய ஹாக்கி மகளிர் அணி தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாக்கி வீராங்கனை சவிதா புனிதா தலைமையில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.

நடப்பாண்டுக்கான ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி தொடர் இந்த மாதம் அதாவது அக்டோபர் மாதம் 27ம் தேதி தொடங்கிய நவம்பர் 5ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் ஜப்பான், சீனா, கொரியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த மகளிர் ஹாக்கி அணிகளுடன் இந்திய ஹாக்கி மகளிர் அணி விளையாடவுள்ளது.

இந்தியா மகளிர் ஹாக்கி அணி வீராங்கனை சவிதா புனிதா தலைமையில் களமிறங்கவுள்ளது. துணை கேப்டனாக வீராங்கனை டீப் கிரேஸ் எக்கா அவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்திய மகளிர் ஹாக்கி அணி 27ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் தாய்லாந்து மகளிர் ஹாக்கி அணியை எதிர்கொள்கின்றது.

அதைத் தொடர்ந்து இரண்டாவது ஆட்டத்தில் 28ம் தேதி மலேசியா மகளிர் ஹாக்கி அணியை எதிர்கொள்கின்றது. இதையடுத்து அக்டோபர் 30ம் தேதி சீனா அணியையும், அக்டோபர் 31ம் தேதி ஜப்பான் அணியுடனும் விளையடாவுள்ளது. இறுதி லீக் ஆட்டத்தில் நவம்பர் 2ம் தேதி கொரியாவுடன் விளையாடவுள்ளது.

ஆசியக் கோப்பை மகளிர் ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நவம்பர் 4ம் தேதியும் இறுதிப் போட்டி நவம்பர் 5ம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 20 பேர் கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை மகளிர் தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி…

சவிதா புனியா(கேப்டன்), டீப் கிரேஸ் எக்கா(துணை கேப்டன்), பிச்சுதேவி கரிபாம், உதிதா, நிக்கி ப்ரதான், சலிமா, நிஷா, இஷிகா சௌதரி, சோனிகா, மோனிகா, நேஹா, நவ்நீத் கௌர், பல்ஜீத் கௌர், ஜோதி, லால்ரெம்சியாமி, தீபிகா, வந்தனா கட்டாரியா, சங்கீதா குமாரி, ஷர்மிளா தேவி, வைஷ்ணவி பால்கே.