நேற்று தொடங்கிய மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர்! தாய்லாந்து அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!!

0
54
#image_title
நேற்று தொடங்கிய மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர்! தாய்லாந்து அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!!
நேற்று(அக்டோபர்27) தொடங்கிய மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் இந்தி ஹாக்கி மகளிர் அணி தாய்லாந்து மகளிர் ஹாக்கி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
மகளிருக்கான 7வது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் நேற்று(அக்டோபர்27) ராஞ்சியில் தொடங்கியது. இந்த தொழில் நடப்பு சேம்பியன் ஜப்பான், தென்கொரியா, இந்தியா, தாய்லாந்து, மலேசியா, சீனா ஆகிய ஆறு நாடுகளை சேர்ந்த மகளிர் ஹாக்கி அணிகள் பங்கேற்றுள்ளது.
இந்நிலையில் நேற்று(அக்டோபர்27) தொடங்கிய மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தாய்லாந்தை எதிர் கொண்டது. தூக்கம் முதலே இந்திய மகளிர் ஹாக்கி அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது.
இறுதி வரை போராடிய தாய்லாந்து அணியால் ஒரே ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. இந்நிலையில் பேட்டியின் முடிவில் 7-1 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அணி தாய்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய ஹாக்கி அணிக்காக வீராங்கனை சங்கீதா குமாரி 3 கோல்கள் அடித்தார். மோனிகா, சலிமா டெடெ, தீபிகா, லால்ரெம்சியாமி ஆகியோர் தலா ஒரு கோல்கள் அடித்தனர். மேலும் தாய்லாந்து அணிக்காக சுபான்சா சமான்சோ ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இன்று(அக்டோபர்28) மாலை நடைபெறும் முதல் லீக் சுற்றில் ஜப்பான்-தென்கொரியா அணி 4 மணிக்கு விளையாடுகின்றது. இரண்டாவது லீக் சுற்றில் தாய்லாந்து-சீனா ஆகிய அணிகள் 6.15 மணிக்கு விளையாடுகின்றது. இரவு 8.30 மணிக்கு நடைபெறும் மூன்றாவது லீக் சுற்றில் இந்தியா-மலேசியா ஆகிய அணிகள் விளையாடவுள்ளது.