இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்! நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் தர்மராஜ் சாதனை!!

0
29
#image_title

இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்! நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் தர்மராஜ் சாதனை!!

பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்து தமிழகத்தை சேர்ந்த தர்மராஜ் சோலைராஜ் சாதனை படைத்துள்ளார்.

நடப்பாண்டுக்கான பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகின்றது. இதில் இந்தியாவை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை வென்று வருகின்றனர். அந்த வகையில் நேற்று(அக்டோபர்27) நடைபெற்ற வில்வித்தை போட்டியில் இந்தியா அணிக்காக விளையாடும் காஷ்மீரை சேர்ந்த 16 வயதான ஷீத்தல் தேவி இரண்டு தங்கப்பதக்கம், ஒரு வெள்ளி பதக்கம் என்று மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். இதையடுத்து நீளம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த தர்மராஜ் சோலைராஜ் இந்தியாவுக்காக தங்கம் வென்று கொடுத்து சாதனை படைத்துள்ளார்.

அதாவது நேற்று(அக்டோபர்27) நடைபெற்ற ஆடவருக்கான நீளம் தாண்டுதல் டி64 பிரிவில் இந்திய அணியின் சார்பாக தமிழகத்தை சேர்ந்த தர்மராஜ் சோலைராஜ் அவர்கள் கலந்து கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய தர்மராஜ் சோலைராஜ் 6.80 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்தார். இதன் மூலமாக இந்திய அணிக்காக தமிழகத்தை சேர்ந்த தர்மராஜ் சோலைராஜ் அவர்கள் மேலும் ஒரு தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்தார்.

இந்த போட்டியில் இலங்கையை சேர்ந்த மத்தக கமாகே 6.68 புள்ளிகள் பெற்றார். இதன் மூலம் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும் ஜப்பானை சேர்ந்த மதாயோஷி கோட்டோ அவர்கள் 6.35 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்து நீளம் தாண்டுதலில் வெண்கலம் வென்றார்.

நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த தர்மராஜ் சோலைராஜ் அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதே போல தர்மராஜ் சோலைராஜ் அவர்களுக்கு விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தக்கூர் அவர்களும் இந்திய விளையாட்டு ஆணைய அதிகாரிகள் அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நேற்று(அக்டோபர்27) நடைபெற்ற பேட்மிண்டன் மகளிர் எஸ்யு5 பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் துளசிமதி முருகேசன் அவர்கள் 21-19, 21-19 என்ற செட் கணக்கில் சீனாவை சேர்ந்த யாங் ஜியுஜியாவை வீழ்த்தினார். இதன் மூலம் துளசிமதி முருகேசன் அவர்கள் தங்கப் பதக்கம் வென்றார். துளியாக முருகேசன் அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே பிரிவில் இந்திய வீராங்கனை மணீஷா ராமதாஸ் வெண்கலம் வென்றார்.