Tamilnadu Gov: நாளை தமிழக அமைச்சரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் பல்வேறு அறிவிப்புக்களை எதிர்நோக்கி மக்கள் கத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை குறித்து புதிய அறிவிப்பு வருமா என்று எதிர்பார்த்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் அனைவருக்கும் ரூ 1000 தருவதாக கூறியிருந்தது. அதன் பின் சில வரைமுறைகளை வகுத்து குறிப்பிட்ட சிலருக்கு தான் இந்த தொகை என கூறியிருந்தனர். இதனால் பலரும் அதிருப்தி அடைந்த்னர்.
மேற்கொண்டு பல்வேறு அழுத்தத்திற்கு பிறகு குறிப்பிட்ட சில வரைமுறைகளை தகர்த்தி தற்போது கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவி, பெண்கள் மறுவாழ்வு மையத்திலிருப்பவர்கள் என அனைவருக்கும் வழங்குவதாக தெரிவித்தனர். தற்சமயம் அரசு ஓய்வு பெற்ற அதிகாரிகளின் மனைவிகளுக்கு வழங்குவதாக தவகவல்கள் வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை. இதுகுறித்து அறிவிப்பு வெளிவர அதிகளவு வாய்ப்புக்கள் உள்ளது.முன்னதாகவே அரசு ஊழியர்கள் ஆளும் கட்சி மீது அதிருப்தியில் உள்ளனர்.
மேற்கொண்டு சட்டமன்ற தேர்தல் வருவதற்கு ஓராண்டு காலம் மட்டுமே இருக்கும் நிலையில் மக்கள் அனைவரையும் தங்கள் வசம் கொண்டு வர நல்ல திட்டத்தை கொண்டு வர வேண்டும் , அதனை மனதில் வைத்து தமிழக அரசு இதுகுறித்து அறிவிப்பை வெளியிட அதிகளவு வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். அதுமட்டுமின்றி புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கும் இனி வரும் நாட்களில் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் என துணை முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதனால் சில வரைமுறைகள் தகர்த்தப்படலாம், மேற்கொண்டு உரிமைத்தொகை அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம் என கூறுகின்றனர் .