ஆகஸ்ட் 26 – உலகமே கொண்டாடும் பெண்கள் சமத்துவ தினம்
பல்வேறு துறைகளில் பெண்கள் செய்த சாதனைகள் மற்றும் முன்னேற்றங்களை குறிக்கும் விதமாக அமெரிக்காவில் பெண்கள் சமத்துவ தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 26 அன்று கொண்டாடப்படுகிறது.இதையே மற்ற உலக நாடுகளும் பின்பற்றி ஆகஸ்ட் 26 ஆம் தேதியை பெண்களை போற்றும் விதமாக பெண்கள் சமத்துவ தினமாக கொண்டாடி வருகின்றன.
பெண்கள் பல தசாப்தங்களாக சமூகத்தில் தங்களை சமமாக ஏற்றுக்கொள்ள பல விதங்களில் போராடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பாலின அடிப்படையிலான பாகுபாட்டிற்கு எதிராக தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பாலின பாகுபாடின்றி அனைத்து துறைகளிலும் சம வாய்ப்புகளுக்காகவும் போராடி வருகின்றனர்.
அந்த வகையில் 1920 ஆம் ஆண்டில், அமெரிக்க அரசியலமைப்பு பத்தொன்பதாம் திருத்தத்தைச் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது, அதன் அடிப்படையில் அனைத்து அமெரிக்கப் பெண்களுக்கும் அவர்களின் அரசியலமைப்பு உரிமையை வழங்குவதாக அறிவித்தது.
யுனைடெட் ஸ்டேட்ஸ் காங்கிரஸ் 1971 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதியை பெண்கள் சமத்துவ தினமாக அங்கீகரித்து. பெண்கள் இந்த சமூகத்தில் சம அந்தஸ்தை அடைய மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளைக் கவுரப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 26 அன்று பெண்கள் சமத்துவ தினம் கொண்டாடப்படுகிறது.