சட்டமாக மாறியது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா!!! ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்ட குடியரசுத்தலைவர்!!!

0
107
#image_title

சட்டமாக மாறியது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா!!! ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்ட குடியரசுத்தலைவர்!!!

மத்திய அரசு கொண்டு வந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். இதன் மூலமாக மசோதா சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் மகளிருக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கைகள் எழுந்து வந்தது. இந்த வகையில் சமீபத்தில் மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா பாஜக தலைமையிலான மத்திய அரசு அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு தரும் மசோதாவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்யும் மசோதாவிற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனைத்து கட்சியினரும் ஒப்புதல் அளித்தனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள உதவியாக இருக்கும் இந்த மசோதாவிற்கு குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் அவர்கள் கையொப்பம் இட்டு ஒப்புதல் அளித்தார். குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் அளித்த இந்த ஒப்புதல் மசோதாவின் பிரதியை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மோக்வால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவானது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக திரௌபதி முர்மு அவர்களுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்து போட்டார்.

இதையடுத்து மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு தரும் மசோதாவானது சட்டமாக மாறியது. இது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

Previous article2ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி வடக்குபட்டு கிராமத்தில் நிறைவடைந்தது!!!
Next articleரத்தத்தை தொடர்ந்து அடுத்து ஹிட்லர் வந்துட்டாரு!!!