Cricket: இந்திய மண்ணில் 300 இலக்கு நிர்ணயித்த போட்டிகளில் வெற்றி பெறாத இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெருமா?
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டியின் முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது இந்த போட்டியில் இந்திய அணி படு தோல்வியை சந்தித்தது.இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. முதல் இன்னிங்ஸில் 259 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது, இதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக ஆடும் என எதிர்பார்த்த நிலையில் 156 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 255 எடுத்தது இதனால் இந்தியாவுக்கு 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுவரை இந்திய மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 300 ரன்கள் இலக்கு நிர்ணயித்த 26 போட்டிகளில் ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது, மீதம் 25 போட்டிகளிலும் தோல்வியை தழுவி உள்ளது.இதற்கு முன் சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்நிலையில் 300 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்துள்ளது எனவே இந்த தொடரை வெல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 8 ரன்களில் அவுட் ஆனார். ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் காலத்தில் விளையாடி வருகின்றனர். ஜெய்ஸ்வால் அரை சதம் விளாசினார்.