செம!! இவர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Photo of author

By Rupa

தமிழக அரசானது போக்குவரத்து துறையில் ஏற்பட்ட ஊழியர்களின் பற்றாக்குறையை நிரப்புவதற்காக தற்காலிக ஊழியர்களை நியமிப்பதாக தெரிவித்திருந்தது. குறிப்பாக ஓட்டுனர்கள் நடத்துனர்கள் ஓய்வு பெரும் பட்சத்தில் அந்த இடத்தை நிரப்ப போதுமான நபர்கள் கையிருப்பில் இல்லை. இதனால் பல இடங்களில் போதுமானளவு பேருந்துகள் இயங்காமலே உள்ளது. இதனை சரி செய்யும் வகையில் புதிய ஆட்களை நியமிக்க வேண்டுமென்றால் அதற்கான கால அவகாசம் அதிகரிக்க கூடும்.

அதுமட்டுமின்றி நிரந்தர பணியாளர்களுக்கு வேலை பளுவும் அதிகரிக்க கூடும். இதனால் ஒப்பந்தம் அடிப்படையில் பணியாளர்களை நியமிக்குமாறு கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி நடத்துனர் ஓட்டுனர் என இருமுகத்தன்மையும் ஒருவராக கவனிக்கும் டிசிசி பணியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோரை தற்காலிகமாக நியமித்தனர்.

இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 535 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் இது நடைமுறை வாழ்க்கைக்கு போதுமானதாக இருக்காது எனக் கூறி சட்டப்படி வழங்க வேண்டிய ஊதியமானது கொடுக்கப்பட வேண்டுமென தொழிற்சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனையடுத்து இது தொடர்பாக கடந்த மாதம் ஒன்பதாம் தேதி வாரிய கூட்டம் நடைபெற்று அதில் இதற்குரிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.அந்த தீர்மானத்தில் டிசிசி பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்திலிருந்து மாற்றம் செய்யப்பட்டு உயர்த்துவதாக தெரிவித்தனர். அதன்படி இனி தினசரி கூலியாக ரூபாய் தற்காலிக ஊழியர்களுக்கு ரூ 872 வழங்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்த அறிக்கையை தற்பொழுது தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.