கொரோனா நோய் தொற்று காரணமாக உலகம் முழுவதும் வர்த்தகம் பெருமளவில் சரிந்து கொண்டே வருகிறது. வேலையின்மை, கிடைத்த வேலையை செய்யும் செயல் போன்றவற்றிக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்தநிலையில் வீட்டிலிருந்தே ஐடி போன்ற பணிகளை செய்ய வாய்ப்பு தேடி வருகின்றனர்.
வீட்டிலிருந்து வேலை செய்வதற்க்கான மக்களின் ஆர்வம் ,தற்பொழுது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ஐடி, தொழில்நுட்பத்துறை, சுகாதாரம், மார்க்கெட்டிங், டெலிவரி ஆகிய துறைகளில் பணியாற்றுவதற்காக நிறைய வாய்ப்புகள் உள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்வது என்பதனை நிர்வாகங்கள் முடிவு செய்த பின்னர் வீட்டில் இருந்து வேலை செய்யும் அங்கீகாரத்தை வழங்குகிறது.இதனால் வேலைவாய்ப்பு தேடுவதில் 442 சதவீதம் அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.மக்கள் பெருமளவில் வீட்டிலிருந்து பணியாற்றவே ஆர்வம் காட்டுகின்றனர்.
கொரோனா தாக்கம் உள்ள இச்சூழ்நிலையில் பணியாற்றுவதால் தொடர்ந்து வர்த்தகம் எந்த இடையூறுமின்றி நடப்பதனால், இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் வேலை தேடுபவர்கள் வீட்டிலிருந்த வேலை செய்வதையே பெரிதும் தேர்ந்தெடுக்கின்றனர்.இத்தனை நாள் வேலை கிடைக்காதவர்கள் கூட தற்போது வேலைகள் குவிந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு இது போன்ற வேலைகள் சாதகமாக அமைந்திருப்பதாக உள்ளது.