மத்திய அரசின் பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

Photo of author

By Parthipan K

மத்திய அரசின் பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் இளநிலை டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி ஜூனியர் டெக்னீசியன், மொத்தம் 14 காலியிடங்கள் உள்ளது. இவர்களின் சம்பளம் 18,700 முதல் 27,300 வரை வழங்கப்படும். வயது வரம்பானது நவம்பர் 11ம் தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு சலுகைகள் வழங்கப்படும்.

பணிக்கான கல்வி தகுதி, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் லித்தோ ஆப்செட் மெஷின் மைண்டர், ஆப்செட் பிரின்டிங், பிளேட் மேக்கிங், எலக்ட்ரோ பிளேட்டிங், பிளேட் மேக்கர் இம்போசிட்டர், ஹேண்ட் கம்போசிங் பிரிவில் முழு நேர ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிரின்டிங் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணிக்கான தேர்வானது ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் https://bnpdewas.spmcil.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 14-11-2022. விண்ணப்ப கட்டணம் எஸ்சி, எஸ்சிஏ, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் போன்ற பிரிவினருக்கு ரூ.200 மற்றும் மற்ற பிரிவினருக்கு இரு 600 கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு https://bnpdewas.spmcil.com/UploadDocument/14%20posts%20Advt.%20(Eng.).9ff35daf-9bad-4f70-9e46-c4bd440a0f37.pdf என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளவும்.