மத்திய அரசின் ‘பெல்’ நிறுவனத்தில் வேலை! மாதம் ரூ.55000 வரை சம்பளம் பெற உடனே அப்ளை பண்ணுங்க!

0
34
#image_title

மத்திய அரசின் ‘பெல்’ நிறுவனத்தில் வேலை! மாதம் ரூ.55000 வரை சம்பளம் பெற உடனே அப்ளை பண்ணுங்க!

மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ‘பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்’ (BEL) நிறுவனம் நாட்டின் பல பகுதிகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம் தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தயாரித்து வருகிறது.தற்பொழுது இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி ப்ராஜெக்ட் இன்ஜினியர் மற்றும் ப்ராஜெக்ட் அதிகாரி பணியிடங்களுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானவை என்றும் தேர்வாகும் நபர்கள் தலோஜா,நவி மும்பையில் உள்ள ‘பெல்’ நிறுவனத்தில் பணியமர்த்தப் படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பதவிகளுக்கு இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

மேலாண்மை : மத்திய அரசு

நிறுவனம்: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)

பணி: ப்ராஜெக்ட் இன்ஜினியர் (Project Engineer-I) மற்றும் ப்ராஜெக்ட் அதிகாரி (Project Officer-I)

காலியிடங்கள்: இப்பதவிகளுக்கு மொத்தம் 22 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ப்ராஜெக்ட் இன்ஜினியர் மெக்கானிக்கல் – 17

ப்ராஜெக்ட் இன்ஜினியர் எலக்ட்ரிகல் – 04

ப்ராஜெக்ட் அதிகாரி – 01

கல்வித் தகுதி: அங்கீகாரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலம் பிஇ, பிடெக் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.அதில் பொதுப் பிரிவினர் குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

வயது வரம்பு: இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 32 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் விதிகளின் படி வயது வரம்பில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ஊதியம் விவரம்: ப்ராஜெக்ட் இன்ஜினியர் மற்றும் ப்ராஜெக்ட் அதிகாரி பதவிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000/- முதல் ரூ.45,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*நேர்முகத் தேர்வு

*எழுத்து தேர்வு

விண்ணப்ப கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.472 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.எஸ்சி,எஸ்டி,பிடபிள்யூபிடி பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

ப்ராஜெக்ட் இன்ஜினியர் மற்றும் ப்ராஜெக்ட் அதிகாரி பணியிடங்களுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் https://bel-india.in/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment – Advertisements என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து முழு விவரம் பெற https://bel-india.in/Default.aspx என்ற இணையதளத்தை அணுகவும்.

கடைசி தேதி: இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க 07-09-2023 கடைசி தேதி ஆகும்.