ஒரே நாளில் பல லட்சம் ரூபாய்க்கு சொந்தக்காரரான தொழிலாளி..!

Photo of author

By Parthipan K

பன்னாவில் சுரங்கம் தோண்டும் போது தொழிலாளி ஒருவருக்கு 7.5 காரட் வைரம் கிடைத்ததால் ஒரே நாளில் பல லட்சம் ரூபாய்க்கு சொந்தக்காரராக மாறியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் ஏராளமான வைர சுரங்கங்கள் உள்ளன. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த சுபால் என்பவர் அவருக்கு சொந்தமான நிலத்தில் சுரங்கம் ஒன்றை தோண்டியுள்ளர். அப்போது, அவருக்கு அதிர்ஷ்டவசமாக 3 வைர கற்கள் கிடைத்துள்ளது. இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்த சுபால், வைரக்கற்கள் கிடைத்தது குறித்து அப்பகுதி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் அந்த வைர கற்களின் எடையை கணக்கிட்ட போது 7.5 கார்ட் ஆக இருந்தது. இந்த வைர கற்கள் சுமார் ரூ. 30 லட்சத்தில் இருந்து ரூ. 35 லட்சமாக இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. சுபால் இந்த வைர கற்களை மாவட்ட வைர அலுவலகத்தில் டெபாசிட் செய்துள்ளார். அந்த வைர கற்கள் ஏலம் விட்ட பின்னர் அதற்குரிய பணம் அவரிடம் அளிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த வைர கற்களின் மீது 12 சதவீத வரியை பிடித்தம் செய்து கொண்டு மீதம் இருக்கும் 88 சதவீத பணம் அவரது கையில் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வைர கற்கள் கிடைத்ததன் மூலம் ஒரே நாளில் சுபால் பல லட்சம் ரூபாய்க்கு சொந்தக்காரராக மாறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு இதே பன்னா மாவட்டத்தில் மேலும் ஒரு தொழிலாளிக்கு 10.69 காரட் எடையிலான வைரம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே வைரச் சுரங்கம் அதிகமாக இருக்கும் இடங்களில் ஒன்று பன்னா. ஆனால், இந்த இடம் மிகவும் பின் தங்கிய இடங்களில் ஒன்றாக இருப்பதுதான் வருத்தத்தை அளிக்கிறது.