அனந்தபுரத்தில் நடைபெற்ற திரவ வேதி பொருள் வெடிப்பு சம்பவத்தில் தொழிலாளி உடல் துண்டு துண்டாக சிதறி பலி-போலீஸ் விசாரணை!!

Photo of author

By Savitha

அனந்தபுரத்தில் நடைபெற்ற திரவ வேதி பொருள் வெடிப்பு சம்பவத்தில் தொழிலாளி உடல் துண்டு துண்டாக சிதறி பலி-போலீஸ் விசாரணை!!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் நகரில் உள்ள ஆர்டிஓ அலுவலகம் அருகே ஸ்பிரே பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி ஒருவர் தகர செட் அமைத்து தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை பெயிண்டில் கலந்து பயன்படுத்தப்படும் திரவ வேதிப்பொருள் இருந்த ட்ரம் ஒன்றை அவர் திறக்க முயன்றார். அப்போது அந்த ட்ரம் திடீரென்று வெடித்து தொழிலாளி தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி பலியானார்.

இந்த சம்பவத்தில் அவருடைய உடல் துண்டு துண்டாக சிதைந்து தூக்கி வீசப்பட்டது. திடீரென்று கேட்ட வெடி சப்தம் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த அனந்தபுரம் போலீசார் மரணம் அடைந்த தொழிலாளியின் உடல்பாகங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

போலீஸ் விசாரணையில் வெடி விபத்திற்கு காரணமான திரவ வேதிப்பொருள் எந்த வகையானது எங்கிருந்து வாங்கி வந்தார் என்பன போன்ற விவரங்கள் தெரிய வரும்.