சரத்குமாருக்கு ஜோடியாக நடிக்கும் உலக அழகி ஐஸ்வர்யா ராய்!!!

Photo of author

By Parthipan K

சரத்குமாருக்கு ஜோடியாக நடிக்கும் உலக அழகி ஐஸ்வர்யா ராய்!!!

Parthipan K

90’s காலகட்டங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர் தான் சரத்குமார். “வயசானாலும் அழகும் ஸ்டைலும் இன்னும் உன்னை விட்டு போகல” எனும் வசனத்திற்கு ஏற்ப ஃபிட்டான பாடியையும், தனித்துவமான ஸ்டைலையும் கொண்டவர் சரத்குமார்.

காலப்போக்கில் இவரது மார்க்கெட் குறைந்த பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகர்களுக்கு அப்பா வேடத்திலும்,குணச்சித்திர நடிகராகவும் நடிக்க ஆரம்பித்தார்.

பொன்னியின் செல்வன் படத்தில் ஒப்பந்தமான சரத்குமார் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வைரஸின் பிடியிலிருந்து விடுபட்டு பின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

ஹைதராபாத்தில் நடந்து வரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பில், பழுவேட்டரையர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் முதன் முதலில் சரத்குமாருக்கு ஜோடியாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளார்.இதில் இவரது கதாபாத்திரம் பாகுபலியில் சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் போல் பிரமலமானால் நன்றாக இருக்கும் என காத்துக் கொண்டிருக்கிறாராம்.

மேலும் இப்படத்தில் கார்த்தி மற்றும் ஜெயம் ரவி போன்றோரும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கொரோனாவினால் ஏற்பட்ட நீண்ட கால இடைவெளிக்குப் பின் எடுக்கப்படுகின்ற இப்படம் மிகவும் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளதாம்.

இதனை அடுத்து தினமும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்து பாதுகாப்பான முறையில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் படக்குழுவினர். மேலும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் மாமனாரான அமிதாப் பச்சனும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பல முன்னணி நடிகர்களை கொண்டு எடுக்கப்படுகின்ற பொன்னியின் செல்வன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.