வங்க தேசத்திற்கு எதிரான உலகக் கோப்பை போட்டி!!! நியூசிலாந்து அணிக்கு திரும்பும் கேன் வில்லியம்சன்!!!

0
34
#image_title

வங்க தேசத்திற்கு எதிரான உலகக் கோப்பை போட்டி!!! நியூசிலாந்து அணிக்கு திரும்பும் கேன் வில்லியம்சன்!!!

உலகக் கோப்பை தொடரில் வங்க தேசத்திற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அணிக்கு திரும்பவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

உலகக் கோப்பை தொடர்பு நடப்பாண்டு இந்தியாவில் பல முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகின்றது. இந்த உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா என பத்து நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றது.

அக்டோபர் 5ம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை தொடர் நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறும். அரையிறுதிப் பெட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் ஒரு அணி குறைந்தது 6 வெற்றிகளை பெற்றிருக்க வேண்டும்.

உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று உள்ள நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன். வில்லியம்சன் அவர்கள் காயம் காரணமாக முதல் இரண்டு பேட்டிகளில் பங்கேற்காத நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கேன் வில்லியம் சன் அவர்கள் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விளையாடினார். பீல்டிங் செய்து கொண்டிருந்த பொழுது முட்டையில் கேன் வில்லியம்சன்னுக்கு அடிபட்டது. இந்நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதிலிருந்து மீண்டு வந்த கேன் வில்லியம்சன் அவர்கள் தற்பொழுது உலகக் கோப்பை தொடருக்கான. நியூசிலாந்து அணியில் இடம் பெற்றுள்ளார்.

காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் கேன் வில்லியம்சன் பங்குபெறாத நிலையில் டாம் லேதம் நியூசிலாந்து அணியை வழி நடத்தினார். இந்நிலையில் சென்னையில் நாளை(அக்டோபர்13) நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் கேன் வில்லியம்சன் அவர்கள் இடம்பெறுவார் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.