உலகக் கோப்பை தொடர் பயிற்சி ஆட்டம்!!! மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட இங்கிலாந்து – இந்தியா போட்டி!!!
உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில் மழை காரணமாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அக்டோபய் 5ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளது. தற்பொழுது உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றது.
இன்று(செப்டம்பர்30) இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான பயிற்சி போட்டி நடைபெறவிருந்தது. இதையடுத்து தொடர்ந்து மழை பெய்ததால் டாஸ் காலதாமதமாக போடப்பட்டது. இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங் செய்ய காத்திருந்த இந்தியா அணியை பேட்டிங் செய்ய விடாமல் மழையானது தொடர்ந்து பெய்தது. சிறிது நேரம் கூட இடைவெளி இல்லாமல் மழை பெய்ததால் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதே போல ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டி மழை காரணமாக 23 ஓவர்களாக குறைக்கப்பட்டு தற்பொழுது நடைபெற்று வருகிறது. நேற்றும்(செப்டம்பர்29) தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டியும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பயிற்சி போட்டிகளில் தொடர்ந்து மழை பெய்தது போல அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை தொடரில் மழை பெய்யத் கூடாது என்று ரசிகர்கள் தற்பொழுதே இறைவனிடம் பிராத்தனை செய்ய தொடங்கியுள்ளனர்.