உலகக் கோப்பை தொடர் 2023!! பாகிஸ்தான் – இந்தியா மோதும் போட்டி!!

Photo of author

By Sakthi

உலகக் கோப்பை தொடர் 2023!! பாகிஸ்தான்-இந்தியா மோதும் போட்டி!!
இந்த வருடம் அதாவது 2023ம் வருடத்திற்கான உலகக் கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள போட்டி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. 2023வது வருடத்திற்கான 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
வருட வருடம் நடக்கும் ஐசிசி தொடர்களான உலகக் கோப்பை தொடர், டி20 உலகக் கோப்பை தொடர், சேம்பியன்ஸ் டிராபி தொடர் என மூன்று தொடர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்த தொடர்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கென உலகம் முழுவதும் தனியாக ரசிகர் கூட்டம் உள்ளது.
இந்த இரு அணிகளும் உள்ளூர் போட்டிகளில் விளையாடாதது தான் இந்த எதிர்பார்ப்பிற்கு காரணமாக இருக்கக் கூடும். ஒவ்வொரு ஐசிசி தொடரிலும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி கட்டாயமாக இருக்கும்.
அந்த வகையில் இந்த வருடத்திற்கான உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கோப்பை போட்டி அக்டோபர் மாதம் 15ம் தேதி நடைபெறவுள்ளதாகவும், இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 2023ம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடவுள்ளது. இந்த இரு அணிகளும் விளையாடவுள்ள முதல் போட்டி அக்டோபர் மாதம் 5ம் தேதி அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது.