அறிந்தும் அறியாமலும், பில்லா, சர்வம், ஆரம்பம் போன்ற பல படங்களை இயக்கியுள்ளவர் தான் இயக்குனர் விஷ்ணு வர்தன். இவர் ஆரம்ப காலங்களில் மணிரத்னம், ராம் கோபால் வர்மா, சந்தோஷ் சிவன் போன்ற பெரிய இயக்குனர்களின் உதவியாளராக பணி புரிந்தார்.
இவரின் முதல் ஹிந்தி படமான “சேர்ஷா” மிகப்பெரிய ஹிட் ஆனது. இப்படம் ஆனது “கார்கில் போரில் போரிட்டு உயிரிழந்த இந்திய ராணுவ வீரரான விக்ரம் பத்ராவை” மையமாக கொண்டது. இப்படத்தை மற்ற எந்த படங்களுடனும் ஒப்பிட முடியாது. இது முற்றிலும் மாறுபட்டது என்றார் விஷ்ணு.
இந்த படத்தை பார்த்துவிட்டு, கமல் சார் எனக்கு போனில் தொடர்பு கொண்டார். அவர் அப்போது சேர்ஷா படத்தை பார்த்து விட்டு இரண்டு நாட்களாக நான் தூங்கவில்லை என்று கூறியதும் என்னால் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அவ்வளவு பெரிய கலைஞன் என்னை பாராட்டும் போது நான் செய்வது அறியாது இருந்தேன்.
கமல் சார் உலகளாவிய படங்களை பார்த்து கதை நுணுக்கங்களை பெரிதும் தெரிந்து வைத்திருப்பார். அவரிடம் கதை சொல்ல சென்றாலே இயக்குனர்களுக்கு பயமாகத்தான் இருக்கும். அவ்வளவு விஷயங்களை தெரிந்து வைத்திருப்பவர் கமல். அதனால் தான் அவருடைய படத்தில் பல நுணுக்க வேலைபாடுகள் இருக்கும். அப்படிப்பட்ட கலைஞர் போனில் சொன்ன வார்த்தையை நான் என்றும் மறக்க மாட்டேன் என்றார்.
சமீபத்தில் வெளிவந்த பேட்டி ஒன்றில் விஷ்ணு, கமல் சார் அமரன் படம் தயாரித்ததன் மூலம் என்னுடைய படம் அவருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கலாம் என்றார்.