உலக நாயகனின் புதிய கோரிக்கை! செவி சாய்க்குமா தமிழக அரசு!

0
176
World Hero's New Demand! Will the Tamil Nadu government listen?
World Hero's New Demand! Will the Tamil Nadu government listen?

உலக நாயகனின் புதிய கோரிக்கை! செவி சாய்க்குமா தமிழக அரசு!

தமிழக மக்கள் மனதில் உலக நாயகனாக வளம் வந்தவர் கமல்ஹாசன்.பின்பு மக்களின் நாயகனாகவே மாற மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி ஒன்றை தொடங்கினார்.இதில் இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் சேர்ந்தனர்.தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கோவை தொகுதியில் வானதி சீனிவாசனுக்கு எதிராக போட்டியிட்டு 1200 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.கமல் தோல்வியடைந்த பிறகு அவர் கட்சியிலிருந்து துணைத்தலைவர் மஹேந்திரன்,பத்மா பிரியா போன்றோர் கட்சியை விட்டு விலகினர்.

இவர்களிடம் பத்திக்கையாளர்கள் கேட்ட போது,கட்சியில் ஜனநாயகம் இல்லை என கட்சியிலிருந்து விலகியவர்கள் கூறினர்.அதற்கடுத்ததாக கமல் கர்மவீரர் காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு தொழிற்சங்க பேரவை ஒன்றை தொடங்கினார்.இந்த பேரவை தொடங்கிய நாளில் நலிவுற்ற 100 குடும்பங்களுக்கு மேல் உள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்தார்.அதனையடுத்து தற்போது தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

அது என்னவென்றால்,சட்டப்பேரவையில் நடக்கும் அனைத்து விவதாங்களும் அனைத்து மக்களுக்கு தெரிய வேண்டும்.அதனால் சட்டமன்ற பேரவையில் நடப்பதை நேரடியாக காணொளி காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.அதிமுக ஆட்சியில் இருக்கும் போதே இந்த கோரிக்கையை தமிழக அரசிடம் வைத்தேன்.ஆனால்,அதிமுக அரசோ இதனை சிறிதும் கண்டுகொள்ளவில்லை.

அதுமட்டுமின்றி கேரளாவில் சட்டமன்றத்தில் நடக்கும் அனைத்து விவாதங்களும் இணையவழியாக ஒளி பரப்பப்படுகிறது.அந்தவகையில் நமது தமிழ்நாட்டில் தற்போது தகவல் தொழில் நுட்பத்தில் சிறப்பாக விளங்கி வரும் நிலையில் நேரடி காணொளி காட்சியை ஒளிபரப்பலாம்.தற்போது நடைபெற இருக்கும் நிதி நிலை கூட்டத்தொடரில் துறை வாரியாக பல்வேறு கோரிக்கைகள் விவாதிக்கப்படும் அதனை நேரடியாக ஒளிபரப்பி பாமர மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த கொரோனா காலக்கட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் விவாதத்தில்  நடப்பதை தெரிந்து கொள்ள கூட்டம் கூடுவார்கள்.அதனால் அவர்கள் நலன் கருதி நேரடி ஒளிபரப்பு செய்தால் அக்கூட்டத்தை தவிர்க்க முடியும்.மக்கள் நீதி மய்யத்தின் கோரிக்கையை தமிழக அரசு பரிந்துரை செய்யுமா என்பதை அனைவரும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Previous articleHDFC வங்கி பங்கு விலை 3% சரிந்தது!! முதலீட்டாளர்கள் வாங்க வேண்டுமா?? விற்க வேண்டுமா அல்லது வைத்திருக்க வேண்டுமா??
Next articleமத்திய அரசு அப்படி எதுவும் செய்யவில்லை! தொழில்நுட்ப மந்திரி அளித்த விளக்கம்!