16 வயது சிறுவனால் உண்டான குழந்தை! 14 வயது சிறுமி செய்த நெஞ்சை பதபதைக்கும் காரியம்!

Photo of author

By Kowsalya

16 வயது சிறுவனால் உண்டான குழந்தை! 14 வயது சிறுமி செய்த நெஞ்சை பதபதைக்கும் காரியம்!

Kowsalya

14 வயது சிறுமி மற்றும் 16 வயது சிறுவன் பழகி சிறுமி கர்ப்பமாகி அந்த சிறுமி தான் பெற்ற குழந்தையை ஃப்ரீசர் பாக்ஸில் வைத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் நாட்டில் இருக்கும் சைபீரியாவில் சேர்ந்த 14 வயது சிறுமியின் வயிறு பெரிதாகி கொண்டே இருந்ததால் அக்கம் பக்கத்தினர் சிறுமியின் தாயாரிடம் கேட்டு உள்ளனர். ஆனால் அந்த சிறுமியின் தயார் உடல் எடை அதிகமாகி உள்ளது என கூறி உள்ளார். அப்பொழுது தான் சிறுமி கர்ப்பமாக இருப்பதை உணர்ந்துள்ளார். இதை சொன்னால் பெற்றோர் திட்டுவார்கள் என சிறுமி பயந்து தானே குழந்தையை பெற்றெடுத்து உள்ளார்.
குழந்தை பிறந்த போது தோட்டத்தில் சிறுமியின் தந்தை வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்து பயந்து போன சிறுமி, பிளாஸ்டிக் பையில் அந்த குழந்தையைப் போட்டு ஃப்ரீசர் பாக்ஸில் வைத்து மூடி விட்டார்.
அதன் பிறகு அதிக இரத்தபொக்கு சிறுமிக்கு ஏற்பட்டுள்ளதால் சிறுமியின் தாய் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வர சொல்லியுள்ளார்.
அப்போது ஆம்புலன்சில் இருந்த துணை மருத்துவரிடம் சிறுமி தான் கர்ப்பமாக இருந்ததையும் பிறந்த குழந்தையை ஃப்ரீசர் பாக்ஸில் வைத்ததையும் தெரிவித்தார். அதிக நேரம் குழந்தை ஃப்ரீசர் பாக்ஸில் இருந்ததால் இறந்து விட்டது என சொல்லபடுகிறது.
இப்பொழுது சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றார். சிறுமியின் கர்ப்பத்திற்கு 16 வயது சிறுவன் காரணம் என்றும் இந்த விடுமுறையில் அவர்களின் காதலை முறித்துக் கொண்டதும் தெரியவந்துள்ளது.