உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி! கோப்பையை வெளியிட்ட ஆஸ்திரேலிய லெஜன்ட் கிரிக்கெட்டர்!!

0
189
#image_title
உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி! கோப்பையை வெளியிட்ட ஆஸ்திரேலிய லெஜன்ட் கிரிக்கெட்டர்!
அடுத்த மாதம் அதாவது ஜூன் மாதம் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான கோப்பையை முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் அவர்கள் வெளியிட்டார்.
ஜூன் மாதம் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் விளையாடவுள்ளது. கடந்த ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி பெற்ற இந்திய அணி இந்த முறை ஆஸ்திரேலிய அணியை வென்று கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இருக்கும்.
2013ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்க் அவர்கள் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படவுள்ள கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார்.