2000 ருபாய் நோட்டுகள் இனி செல்லாது! இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!!

0
173
#image_title
2000 ருபாய் நோட்டுகள் இனி செல்லாது! இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!
இதுவரை புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதையடுத்து மக்கள் அனைவரும் தங்கள் கைவசம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் ஒப்படைக்குமாறு ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2016வது வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் புதிதாக 2000, 500, 200 ரூபாய் நோட்டுகள் இந்திய ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டது.
நாள் செல்ல செல்ல 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவதை ஆண்டுக்காண்டு குறைத்துக் கொண்டு வந்தது மத்திய அரசு. பின்னர் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது நிறுத்தப்பட்டது என்றும் அறிவிப்பும் வெளியானது. இதையடுத்து நேற்று அதாவது மே 19ம் தேதி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கி,
* கிளீன் நோட் பாளிசி என்ற கொள்கை அடிப்படையில் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதன்படி 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்தவும் வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
* மக்கள் தங்கள் கைகளில் வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை வங்கிகளில் டெப்பாசிட் செய்து மாற்றிக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு 20000 வரை மாற்றிக் கொள்ளலாம்.
* 2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தாலும் செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.
* சாதாரண பணப்பரிவர்த்தனைகளில் 2000 ரூபாய் நோட்டுக்களின் பயன்பாடு குறைந்துள்ளது. இதனால் இந்த நோட்டுகளை திரும்பப் பெறப்படுகின்றது.
* மற்ற ரூபாய் நோட்டுக்கள்(500, 200) புழக்கத்தில் அதிகமாகவே உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றது.