புதிய ஜெர்சிக்கு மாறிய குஜராத் டைட்டன்ஸ் அணி! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!

0
129
#image_title
புதிய ஜெர்சிக்கு மாறிய குஜராத் டைட்டன்ஸ் அணி! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!
நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து நாளை அதாவது மே 14ம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் ஊதா நிறத்தில் ஜெர்சி அணிந்து கொண்டு விளையாடவுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
நடப்பு ஐபிஎல் குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக விளையாடி வருகின்றது. 12 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
நாளை அதாவது மே 14ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதவுள்ளது. இதையடுத்து நாளைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஊதா நிறம் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடவுள்ளது.
ஊதா நிற ஜெர்சியை அணிந்துள்ள வீரர்களின் புகைப்படங்களை பகிர்ந்து புற்று நோயை முன் கூட்டியே கண்டறிவது மற்றும் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஊதா நிறம் கொண்ட ஜெர்சி அணிந்து விளையாடவுள்ளதாக குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
author avatar
Savitha