உடல் பருமனாக உள்ளது என்று கவலையா!  குறைக்க ஒரு சில டிப்ஸ்!!

Photo of author

By Selvarani

உடல் பருமனாக உள்ளது என்று கவலையா!  குறைக்க ஒரு சில டிப்ஸ்!!

உடல் பருமன் என்னும் பிரச்சனைக்கு உள்ளாகும் பெண்கள் இடுப்பு, பிட்டம் போன்ற பகுதிகளில் தான் அதிக சதையைக் கொண்டிருக்கிறார்கள். இதேபோன்று உடல் பருமனுக்கு உள்ளாகும் ஆண்களுக்கு தொப்பையில் தான் அதிகப்படியான கொழுப்புகள் இருக்கும். அதனால் உடல் எடை குறைப்பில் ஈடுபடுபவர்கள் இந்த பகுதியையும் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப பயிற்சிகளில் இறக்குவது நல்லது.

மொத்த உடல் எடையைக் குறைப்பதை விட கடினமானது குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கவனம் செலுத்தி அதைக் குறைப்பது என்று சொல்லலாம். அந்த வகையில் தொடை சதையை குறைக்க என்ன பயிற்சி செய்யலாம் என்பதை பார்க்கலாமா?

தொடைப்பகுதியில் இருக்கும் சதையைக் குறைக்க வேண்டும் என்றால் கால்களுக்கான பயிற்சியில் ஈடுபடுவது அவசியம். கால்களுக்கு பிரத்யேகப் பயிற்சி அளிக்கும் ஜாக்கிங் ,வாக்கிங், ரன்னிங், சைக்ளிங் ,ஸ்கேட்டிங் போன்றவற்றைச் செய்யலாம். உடல் கொஞ்சம் ஒத்துழைத்தால் நீண்ட தூர பயணங்கள் கூட நன்மை தரும்.

நடைப்பயிற்சி:

மிதமான நடைப் பயிற்சி காலை, மாலை அரை மணி நேரம் என்று குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி செய்யுங்கள் .வேகமாக கையை வீசிக்கொண்டு மூச்சிறைக்க நடக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. மிதமான வேகத்துடன் கூடிய நடைபயிற்சியைக் கட்டாயம் அரை மணி நேரமாவது செய்ய வேண்டும்.

ஜாக்கிங்:

ஜாக்கிங் செய்யும் போது கால்களுக்கு நல்ல பயிற்சி தரும். பரந்த இடத்தில் இந்தப் பயிற்சியைச் செய்யுங்கள்.

சைக்கிள் பயணம்:

உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து தசைகளும் வேலை செய்யும் பயிற்சி என்றால் அது சைக்கிள் பயிற்சிதான். அதிலும் கால் தசைகளுக்கு வலு கொடுத்து தொடையில் படிந்திருக்கும் அதிகப்படியான கொழுப்புகளைக் கரைக்க அற்புதமாக உதவுகிறது சைக்கிள் பயிற்சி.

தினமும் அரை மணி நேரமாவது சைக்கிள் ஓட்டுங்கள். இதைப் பயிற்சியாகவும் செய்யலாம் .கல்லூரி, அலுவலகம் செல்லும் பெண்கள் தினசரி பயன்பாட்டுக்கும் சைக்கிள் பயன்படுத்துவது கால்களுக்கும் தொடைகளுக்கும் வலுக்கொடுக்கும். அதோடு தொடர்ந்து செய்யும் சைக்கிள் பயிற்சியில் இரண்டு கால் தசைகளும் ஃபிட்டாக இருக்கும்.

நீச்சல்:

அதிகப்படியான எனர்ஜியை கரைக்க உதவிடுகிற ஓர் பயிற்சி. உடலில் அனைத்து பாகங்களுக்கும் ஒரே நேரத்தில் வேலை கொடுக்கும். இது உங்கள் மூச்சினை சீராக்கும். அதை தவிர தொடைகளில் உள்ள அதிகப்படியான தசையை குறைக்க உதவிடும் .நீச்சல் தவிர அக்குவா,ஜும்பா போன்ற தண்ணீரில் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளை நீங்கள் மேற்கொள்ளலாம்.