ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாகும் ஆடி மாதத்தின் சிறப்புகள், நன்மைகளையும் பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம்.ஆடி மாதத்தில் வரும் ஞாயிறு செவ்வாய் வெள்ளி ஆகிய மூன்று நாட்களும் அம்மனை வழிபட மிக மிக உகந்த நாளாக கருதப்படுகிறது.இது மட்டுமன்றி ஆடி வெள்ளிக்கிழமை அன்று நம் முன்னோர்களை வழிபட மிகவும் உகந்த நாளாக கருதப் படுகிறது.
இப்பொழுது ஆடி வெள்ளிக்கிழமை அன்று அம்பிகையையும் நமது முன்னோர்களையும் எவ்வாறு வழிபடுவது என்பதனை பற்றி இதில் காணலாம்.
ஆடி வெள்ளிக்கிழமை அன்று காலை எழுந்து தலையுடன் நீராடி பின்பு வேப்பமரம் உள்ளவர்கள் வேப்ப மரத்திற்கு மஞ்சள் குங்குமம் இட்டு விளக்கு வைத்து வழிபடலாம்
வீட்டின் முன்பு வேப்பமரம் இல்லாதவர்கள் ஒரு சிறிய வேப்பம்
கொத்தையை உடைத்து வந்து செம்பு அல்லது வெள்ளி சொம்பில் மஞ்சள் குங்குமம் இட்டு சொம்பு முழுவதும் தண்ணிர் நிரப்பி அந்தத் தண்ணீரில் மஞ்சள் கலந்து அதனுள் ஒரு எலுமிச்சை பழத்தை போட்டு பின்பு நம் பறித்து வந்த வேப்பிலையை சொம்பினுள் வைக்கவேண்டும். அதாவது கலசம் போல் செய்ய வேண்டும்.
இவ்வாறு கலசத்தை ரெடி பண்ணிவிட்டு நம் வசதிக்கு ஏற்ப ஐந்து வகை அல்லது மூன்று வகை சாதங்களை செய்ய வேண்டும் அதாவது எலுமிச்சை சாதம்,தயிர் சாதம், புளி சாதம்,சர்க்கரை பொங்கல் இதுபோன்ற உணவுகளை செய்து அம்மனுக்கு இலையில் இட்டு, இளநீர் வைத்து
தீபாரணை காட்டி அந்த கலசத்தினுள் அம்மனே குடி புகுந்து உள்ளதாக நினைத்து நம் முன்னோர்களையும் நினைத்து மனதார வழிபடவேண்டும்.
குடும்பத்தில் ஏதேனும் கன்னி பெண் தீயில் இறந்துவிட்டாள் அவர்களை நினைத்து சுவற்றில் மஞ்சள் வட்டம் போட்டு குங்குமம் வைத்து அதன் கீழ் இந்த படையலை வைத்து நாம் வணங்க வேண்டும்.இவ்வாறு மனதார வழிபட்ட பின்பு அம்மனுக்கு படைத்த அந்த சாதத்தை முகம் தெரியாதவர்களுக்கு பிரசாதமாக வழங்கி பின்பு நாமும் அதை மனதார சாப்பிட வேண்டும்.ஆனால் பூஜைக்கு வைத்த இளநீரை நாம் சாப்பிடக்கூடாது அதனை செடி அல்லது மரத்தின் அடியில் ஊற்றி விட வேண்டும் பின்பு எலுமிச்சை கனியை எடுத்து நம் வீட்டில் வைத்து விட்டு வேப்பிலையை வேப்பமரத்தின் அடியில் கால்மிதி படாதவாறு போட்டு விட்டு அந்த தண்ணீரை செடியின் அடியில் ஊற்றி விட வேண்டும்.
இவ்வாறு நாம் பூஜை செய்யும்போது நம் வீட்டினுள் அம்மன் பரிபூரணமாகக் குடியிருப்பாள் வீட்டில் சந்தோசமும் நிலவும் மேலும் ஆடிவெள்ளி அன்று நம் முன்னோர்களை நினைத்து வழிபடுவதால் முன்னோர்களின் ஆசியும் நமக்கு முழுமையாக கிடைக்க பெறும்.